புதன், 27 ஜூன், 2018

தொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்

வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . 

இப்படிதாங்க நம் உடலுக்குத் தேவையான வைத்தியம் நாம் உண்ணும் உணவிலும் உண்ணும் முறையிலுமே மறைந்திருக்கிறது. நம் உடலில் பல சுரப்பிகள் உள்ளன அந்தச் சுரப்பிகளின் இயக்கங்கள் முக்கியமானது இயங்காமல் போவதினால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு வியர்வையையும் இரத்தத்தையும் எடுத்துக்குங்க உடலில் இரத்தம் சுரக்காமல் போனால் என்னாகும் என்ன ஆகும் ? வியர்வைச் சுரக்கமால் போனால் என்ன ஆகும்?
கம்பஞ்சோறும் மோரும் 


என்ன ஆகும் உடம்பில் இருக்கும் இரத்தம் சுற்றிச் சுற்றி வந்து கெட்டுப்போக ஆரம்பிக்கும் இரத்தம் கெட்டால் என்னாகும் உடலின் பாகங்களுக்குத் தேவையான சக்திகள் கிடைக்காது, சக்திகள் கிடைகாமல் போவதால் உடலின் பாகங்கள் வலுவிழந்துபோகும் மொத்த உடலுமே திடமற்றுப் போகும். பலபலத் தொற்று நோய்கள் எளிதாக உடலைத் தாக்க ஆரம்பிக்கும். இதெல்லாம் எதனால இரத்தம் சுரக்காமல் இருக்கும் இரத்தமும் கெட்டுப் போனதினாலே. இரத்தம் கெட்டுப்போனால் எல்லாம் போச்சு அதற்கும் வைத்தியம் பார்த்தால் சரியாப் போகும்னுச் சொன்னா அதுதான் தவறு.


இரத்தம் சுத்தமாக மருந்து மாத்திரைகளால் தான் முடியுமா ? அப்படியானால் நாம் உண்ணும் உணவின் பங்கானது என்ன நமது உடலில் ? இப்படிப் பல கேள்விகளை அடுக்கிட்டே போகலாம், பதில் தான் கிடைக்காதுச் சரியாக . சரி நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்க. பிறந்த குழந்தைகளுக்குச் சில உடல் உபதைகள் உடலுறுப்புகளின் வளர்ச்சி அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமென்று மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருப்போம், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருப்போம் மேலப் போனால் புலம்பிக் கொண்டிருப்போம்.கேழ்வரகு அடை

ஆனால் சில மருத்துவர்கள் குழந்தை நல மருத்துவர்கள் சரியாகச் சொல்லுவாங்கப் பாருங்க, ஆமாம்ப்பா, குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்கு இல்லைன்னுல ஆனால் இது தானாகச் சரியாகும் தாய்ப்பால் சரியாகக் கொடுக்கச் சொல்லுங்க என்பார் . எவ்வளவு பெரிய உண்மையை மிகச் சாதாரனமாகச் சொல்லிடுவார். உண்மையும் அதானுங்கத் தாய்ப்பாலுக்கு இணையாக வைத்தியம் அந்தக் குழந்தைக்கு எதுவும் செய்துவிட முடியாதுங்க. இன்னொன்றுக் கவனித்தீர்களென்றால் எல்லாம் விளங்கிவிடும் இனி யாரும் வைத்தியம் தேடிப் போகமாட்டீர்கள். 

குழந்தைக்குத் தாயானவள் தரும் தாய்ப்பால், அன்னைத் தன்னுடைய இரத்தத்தையே பாலாக்கித் தருகிறாள் . இரத்தம் இதைப்பற்றித் தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், தாயானவளின் உடலில் தானுண்டச் சத்தான உணவுகளை இரத்தமாகவும் பாலகவும் மாற்றுகிறது. அப்போ இரத்தம் சுரக்கத் தேவையானதெது ஆரோக்கியமான உணவு . ஆரோக்கியமான உணவு மட்டும் உண்டால் போதுமா ? ஆம் போதும் அதை உண்ணும் முறையில் மட்டும் சில வழி முறைகளைக் கடைப்பிடித்தால் போதும் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் , இதுதான் வாழ்க்கையென்றாகும் வாழ்வாதரமென்றாகும். 

பழையச் சோறும் மோரும்

பசி எடுக்கும் பொழுதுச் சாப்பிடுங்க, தாகமெடுக்கும் பொழுதுத் தண்ணீர்க் குடிங்க எதையும் தள்ளிப் போடாதீங்க , வருதாப் போயிடுங்க எதையும் வச்சிக்கவும் கூடாது எதுவுமில்லாமலும் இருக்கக் கூடாது. நேரத்துக்குத் தான் சாப்பிடுவேன் என்ற அட்டவணையெல்லாம் தூக்கித் தூரப் போடுங்க . சாப்பாட்டை வாயை மூடி நன்றாகச் சுவைத்து மென்று கூழாக்கித் திரவப் பதத்தில் உள்ளே அனுப்புங்க (தொட்டில் பழக்கம் ) தண்ணீரையும் சுவைத்து மென்று பொருமையாக அருந்துங்கள் எதற்குமே அவசரம் வேண்டாம். சாப்பாட்டிற்கு முன்னாலும் பின்னாலும் அரை மணி நேரத்திற்குத் தண்ணீர்க் குடிக்காதீர்கள். 

திடப்பொருளாக உணவை உள்ளே அனுப்பாதீர்கள் ஏனென்றால் செரிமானத்திற்குப் பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும், செரிமானப் பிரச்சனையென்றால் இரத்தத்திற்குத் தேவையான சக்திகள் சரியாகக் கிடைக்காமல் போய்விடும் ஆதலால் நீடு வாழ உணவு உண்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எதுவும் எங்கும் சென்றுவிடாது உடல் ஆரோக்கியமாக இருந்தால் எதையும் வென்று விடலாம். இயற்கையான உணவு அதாவது சமைக்காத பசுமையான உணவில் 100% சதவீதம் முழுச் சக்தியையும் , சமைத்த உணவுகளில் 75% முதல் 50% வரை சக்தியையும் இறைச்சிகளில் 25% சக்தியையும் நாம் பெருகிறோம். 

முந்தியப் பதிவு : வாங்கச் சாப்பிடலாம் 


கலியுகம் : பழைய சோறும் மோரும் பச்சைமிளகாய்ச் சின்ன வெங்காயமும் காலை உணவாய் எடுத்துக்கொள்ளப் பல நோய்கள் நம்மை விட்டு ஓடுமென்று சொல்லி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன் அன்பர்களே . தொடரும் ... செவ்வாய், 26 ஜூன், 2018

நாகரென வானு யர்ந்த ஆதி மகனானபோனவழி யேறு மிந்த நாளை நலமாக வந்து
ஆறுமென வேநி னைந்த மனதாலும்
போகுமென வேநி ரைந்த மேனி யதுமாக முந்தி
ஏறுமுக மேஅ ரங்கம் உடனாளும்

ஞானவடி வாகு மந்த ஞாய மலராகி நின்ற
நாதமுட னேஇ சைந்த மதியாலும்

நாகரென வானு யர்ந்த ஆதி மகனான எந்தன்
ஆறுமுக னேமொ ழிந்த தமிழாகி

கோணமழி யாத விந்தை யாகு மதியேவி ளைந்து
தேடுமொரு நாளும் மின்ன திரிவேனே

கோளமயி லேறி வந்து ஆடு மழகாக மந்தை
மானுமத னோடு யெங்கும் அறிவாயோ

தானமழி யாது யர்ந்து மீத மெனுமாய மன்று
வேடமணி யேன லைந்து புதிதாக

தானுமழை யாத யர்ந்து வாழ வழிதேடு மெங்கள்
வேதமுறை யாகி நந்தன் பகவானே

செவ்வாய், 19 ஜூன், 2018

காய மொத்த மருந்து ...!

காய மொத்த மருந்து தரார் தராரென 
காண வொற்ற விருந்து தடார் தடாரென 
கால யுத்த மறிந்து திடீர் திடீரென ...... திறவும்கோளே


கார முற்ற நொருங்கு சடார் சடாரென 

காத லொத்த அறிந்து தயா தயாவென 
கான லற்ற விருப்பம் கனா கனாவென ...... கடவுவாயே 
சாய விட்ட மழித்து வரீர் வரீரென 

சார மொற்ற மலர்ந்து துளீர் துளீரென 
சாலை யொத்த நடந்து விடா விடாவென .... விதியெனேனே


சாம சுக்கு பிழிந்து குளீர் குளீரென 

சாத லுந்த வழிந்து சிறார் சிறாரென 
சாப மொத்த இருப்பு சுலீர் சுலீரென ...... மருகுவானே 

ஆய மிச்ச மிருந்து அளா வளாவென 

ஆசை நித்த மருந்தும் நிரா நிராவென 
ஆன மொத்த மிருந்து விழா விழாதென ..... விடிவுமாக 

ஆள குற்ற மளந்து சுடா சுடாவென 

ஆறெ ழுத்தை வணங்கி வரார் வராரென 
வாளு டுத்தி வழக்கை தடால் தடாலென ...... கனவுமாக 

தீய தொற்ற வழக்கை இலா இலாவென 

தீப மேற்று மொழிக்கு உலா உலாவென 
தீர னேற்ற வழிக்கு நிலா நிலாவென ...... அருளுவாயே 

தீத னைத்தும் விரட்டி இரா இராதென 

யோக வித்தை நிரைந்து கலா கலாவென 
தீவி ரத்தை யுடுத்தி திசா திசாவென ....... திரியுரோமே


கலியுகம் : திருபுகழ் ஓல மிட்ட சுரும்பு தனா தனாவெனும் பாடலைப் போலவே எழுத முயன்றேன் தவறிருப்பின் மன்னிக்கவும் பெரியோர்கள் 

செவ்வாய், 12 ஜூன், 2018

மனகுறவனாகும் மதியோனே !


தனதறிய மாய மயமறியு மாள
தரகறியும் கோள            முதலாரோ

சகதமிழ ரோடு வழிமொழியு மாக
சரகணிய ஓடும்               முருகோனே

குணகுறவ னோட டிபதமதி யேற
குயவனவ னாட               குளமானேன்

குழவியுய ராக வரமருளு வானே
குடமுழுது மாக                நிரைவானே

தினமுருகு வாரு ருவழிசதி ராட
திசையிலொரு வாசல்         திறவாயோ

திகழுதமி ழாள வசதிவர வாய
திருமுருக னான                       பெருமானே

மனதினுரு மாற மயமுதய வாக
மரமதிரு மாட                            மயமானே

மகவிருவ ராக மருகுமய ஞான
மனகுறவ  னாகும்                  மதியோனே


கலியுகம் : திருப்புகழ்ப் பாடல் வரிகள் போலவே எழுதத் துவங்கினேன் தவறுகள் இருப்பின் மன்னித்தருள வேண்டும் இச்சிறுவனைப் பெரியோர்கள்

       

திங்கள், 11 ஜூன், 2018

நிலைக்கொள நினைந்த நிலைதாராய் !


மனத்தினை முடக்கும் மணக்குள மயக்கம்
மயத்தினை அடக்கும் மறையாக
மரக்கிளை முழக்கம் அகத்திரை யொழுக்கம்
மலைத்திட உறக்கம் மடையேறி
தினத்தினை யுடுத்தும் கணைத்தொட வியக்கும்
திசைக்கொரு மருந்தும் மணையாள
திருத்திரு வழக்கம் மணிக்கொரு முழக்கம்
திகழ்வது நிலைக்க நினைவாரோ
தனைத்தர விழைந்தும் களத்தினில் கரைந்தும்
தவத்திடை விருந்தும் தவறாமல்
தரத்தர விழுங்கும் தகிப்பினி லுடுத்தும்
தனித்திர மறந்தும் தனியாக
நினைத்தவர் அறிந்தும் நிலைத்தவர் அரிந்தும்
நிகழ்வென நடத்தும் நிலைதானே
நிறத்தினை அடை(ள)ந்தும் நிறுத்தென நடந்தும்
நிலைக்கொள நினைந்த நிலைதாராய்

வெள்ளி, 8 ஜூன், 2018

ஆங்கில மருத்துவமா ? தமிழ் மருத்துவமா ?

அனைவருக்கும் வணக்கம் 
                                     ஆங்கில மருத்துவமா ? தமிழ் மருத்துவமா ? என்ற கேள்விகளோடு இன்றைய பதிவைத் துவக்குகிறேன். பொதுவாக ஆங்கில மருத்துவத்தை நாடவே ஆர்வம் அதிகம் இருக்கிறது என்ன தான் ஆங்கில மருத்துவம் பார்த்து உடனடி நிவாரணம் கிடைத்தாலும் அடியோடு நோய் அழிக்கப்பட்டதா ? என்ற கேள்விதான் தொற்றி நிற்கின்றது மீதம் , வேறு என்னதான் வழியென்று தேடுவதற்கான நேரம் நம்மிடம் இல்லையென்றப் பொதுவான பதில் எல்லோருடைய கையிலும் உண்டு. 

சரீரத்திற்கு என்ன தேவைத் தடையில்லாமல் இயங்குவதற்கு ? மருந்து மாத்திரைகள் இருந்தால் போதுமென்ற நிலையிலே இன்று நாமிருக்கிறோம் கடைசி வரைக்கும் அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்திடுவோம்னுச் சொல்றீங்களா ? கட்டக் கடைசிக்கு நம்மைக் கொண்டு சென்றது மருந்து மாந்திரையா ? சரியாகவே புரிய மாட்டுதில்லைங்க ஆமாம் அதேதான் அடிபட்டக் காயத்திற்கு மருந்துப் போட்டால் சரியாப் போகுது ஆனால் உள்ளுக்குள்ள ஏற்பட்ட நோய்க்கு மருந்துச் சாப்பிட்டுட்டே இருக்கோம் நிறுத்தாமல் இதுதான் வாழ்க்கையா ? இயற்கையா ? செயற்கையா ? 

இன்றைக்குப் பாருங்க ஆங்கில மருத்துவத்திற்கு நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்பிற்கான இடம் கல்லூரியில் கிடைக்கும்  என்றாகிவிட்டது. அரசியல் வியாதிகளெல்லாம் சேர்ந்து வாங்கும் கிம்பளங்களால்  ”மருந்தாலும் சாவு மருத்துவம் படிக்க வந்தாலும் சாவு” என்ற புது மொழியை எழுத வைத்துவிட்டனர். நோய்க்கான தீர்வைக் கொடுக்காத மருத்துவத்திற்கு எத்தனை போட்டி எத்தனை போராட்டங்கள் என்று பார்த்தால் ஒன்னுமே புரிய மாட்டேங்குது யார் பின்னிய வலையிது ? ஏன் பின்னப் பட்டது ? பட்டத்து யானைக்கும் வைத்தியம் பார்த்தனராம் தமிழர்கள் . 

காசு சம்பாதிக்கத்தான் மருத்துவம் என்ற நிலையே இன்று அதற்கான போட்டியாக இருந்தால் அடுத்த நுழைவுத் தேர்வுக்காக அவனோ அவளோ தயாராகிவிடுவார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவையென்று களமிறங்கியவர்களுக்கு நுழைவுத் தேர்வே பெரும் தடைதான் . ஏன்னாப் பாமரனுக்குப் போய்ச் சேர வேண்டியது எதுவும் இதுவரை சரியாகப் போய்ச் சேரவில்லை ( தம்பி பதிவு வேற எங்கயோ போகுதே , அப்பவே அந்தப்பக்கம் போய்டுச்சுங்க ) என்பது தான் உண்மை எல்லாருக்கும் தெரிந்ததைத் தான் சொல்றேன்னா ? நான்... அட ஆமாமில்ல ! 

சித்தர்கள் பாடலெல்லாம் நமக்குப் புரியாதே போக வேண்டும் என்றே மொத்தம் புதிரான கூட்டம் கட்டம் கட்டியே கணக்குப் பார்த்துக் கவணில் கோர்த்து எரிந்தவையல்லவா  இன்றைய தினம் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிலையும். புரியாதே புலம்புகின்றோம் புரண்டுப் புரண்டு வருந்துகின்றோம் இப்படியே இரண்டு தலைமுறையை ஓட்டிட்டோம் என்றாலும் அடுத்தத் தலைமுறைக்கும் அதையே புகட்டுகின்றோம் ஏன் ? எதற்கு ? என்ற கேள்விகளை நமக்கு நாம் கேட்காததன் விளைவு விளைந்து நிற்கின்றது. 

சித்தர்கள் பொதுவாக என்ன செய்திருக்காங்க யாருக்கும் புரியாமப் பாட்டெழுதி வச்சிருக்காங்க என்றுத்தான் தோன்றும் நமக்குத் தமிழ் மொழி முழுமையாய் அறியாதலால் அப்படிச் சொல்லித் திரிகிறோம். ஆனால்  என் மனசு என்ன சொல்லுதென்றால் சித்தர்கள் செய்த வேலையெல்லாம் மானுட மேனியைச் சரீரத்தை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் மனித ஆரோக்கியத்திற்கு ஆகாரத்திற்கும் உண்டான தொடர்பு நிலைகளைப் பலவாரு ஆராய்ச்சி செய்து அவர்களும் அதனைப் பயன்படுத்திப் பலகாலம் உடலுடனும் உடலற்றும் வாழ்ந்தார்கள் வாழ்கிறார்களென்றே சொல்கிறது ஆழ் மனசு... 

”தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” எப்படி அழகாய் அர்த்தமெய்யாய்ச் சொல்லியிருக்காங்க அப்பவே. தொட்டில்ல என்னங்கப் பழக்கம் நமக்கு அதை எப்படிச் சுடுகாடு வரைக்கும் கொண்டு செல்வது ? உடைத்துச் சொல்வதெறால் குழந்தைக்கான உணவு முறையைப் பாருங்கள் திரவ நிலை உணவுகளாகவே உள்ளன ஏனென்று கேட்டால் குழந்தைக்குப் பல் இல்லையென்று பதில் வரும் அப்படித்தானே நம்மை யோசிக்க வடிவமைச்சிருக்காங்க மொத்தம் புதிரான கூட்டம் . அதாகப்பட்டது தொட்டில் பழக்கம் என்பது திரவ உணவுகளையே நம் உடலானது ஏற்கவல்லது, சுடுகாடு வரை அப்படிக் கடைப்பிடித்தால் சுடுகாட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்பதையே சூசகமாகச் சொல்லிச் சென்றுள்ளனர் . 


துத்தி இலைப்பறித்து தூதுவளையும் சேர்த்து 
உணவாக அ(ம)ருந்து புற்றும் விட்டோடும் புதிராய் போகும்


கலியுகம் : திட உணவுகளை உட்கொள்ளும் நாம் எப்படித் திரவு உணவுக்கு மாற முடியும் என்றால் திட உணவானது தொண்டையைத் தாண்டிச் செல்ல அனுமதியாது அதற்கு முன்னமே உமிழ் நீர்க் கலந்துப் பற்களால் மென்று நாவினால் சுவைத்துக் குழைத்துக் கூழாக்கி அனுப்புங்கள் தொடரும் 

செவ்வாய், 22 மே, 2018

வாங்கச் சாப்பிடலாம்

”வட்டத்தை வரைந்துவிட்டே வாழ்வைத் தந்தானே
விட்டத்தை விரைந்துகூட்ட ஆசைக் கொண்டோமே
சட்டத்தை அறுத்துகட்டிக் கோணம் செய்தோமே
கட்டத்துள் தனையடைத்துக் காலம் என்றோமே”

ஒரு வட்டத்தை வரைந்து வைத்து நமக்கான எல்லாவற்றையும் அந்த வட்டத்துக்குள் வைத்தே நமக்கான வாழ்க்கையைத் தொடங்கிக் கொடுத்தான் இறைவன்.

ஆனால் நாம் அதைச் செய்தோமா என்றால் இதுவரைக்கும் இல்லை எனபதே உறுதியான பதில் . செய்தார்கள் என்றாலும் உறுதியான பதில்  சித்தர்களும் ஞானிகளும் அடங்குவர் அப்படியிருக்க,

கடவுள் கொடுத்த வட்டத்தின் விட்டத்தை விரைவில் பெரிதாக்கவே எல்லாரும் முயன்றிருக்கோம் யாராலும் அந்த வட்டத்துக்குள் தன்னைத்தான் அடைத்துக் கொள்ள முடியவில்லை விரும்பவில்லை. இப்படிதாங்க நம்முடைய உணவுமுறை முதற்கொண்டு பல வழிமுறைகளை நாம் மாற்றி அமைத்ததாலே நோயும் பேயும் வந்தமர்ந்தது நம் வாழ்வில் உண்மையா என்று சிந்திந்து பாருங்கள்.

சிறுவயதில் நாம் உணவு உண்ணும் பொழுது நன்றாக யோசித்துப் பாருங்கள் அப்பா என்ன சொன்னாரென்று எனக்கு ஞாபகம் இருக்கு என்ன சாப்பிடும் பொழுதுப் பேச்சு வேண்டியிருக்கு “ வாயை மூடிக்கொண்டு சாப்பிடு ’’ என்று , அப்போ நாமென்ன நினைத்தோம் என்றால் வாயை மூடிக் கொண்டு எப்படிச் சாப்பிடுவதென்ற ஒரு கேளிப்புன்கையை மட்டுமே அவருக்குக் கொடுத்திருப்போம். அதை இப்போ யோசித்தால் தான் புரிகிறது அவர்கள் மேம்போக்காகச் சொன்னார்கள் நாம் விளையாட்டாக நினைத்து விட்டுவிட்டோம்.


யாருக்கும் தொப்பையோ உடம்போ அளவுக்கு அதிகமாக ஏற வேண்டிய அவசியமே இல்லை . அப்படி ஏறுதென்றால் நாம் அவசியத்தை மீறுகின்றோம் வட்டத்தின் விட்டத்தை அதிகப் படுத்த முயற்சித்தோம் என்பதே உண்மை . சரி வாங்கக் கதைக்கு வருவோம் பசி எடுக்கும் பொழுது மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் தாகம் எடுக்கும் பொழுது மட்டும் தண்ணீர் அருந்துங்கள் ஆனால் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் அரை மணி நேரத்தைத் தண்ணீர் அருந்த ஒதுக்கி வையுங்கள் இப்படிக் கடைப்பிடிச்சாலே உடம்பிலுள்ள பல நோய்கள் சொல்லாமல் கொல்லாமல் ஓடிவிடும் இருந்த இடம் தெரியாமல். 

நம் உடம்புக்குச் சரியான வைத்தியர் யாரென்று பார்த்தால் நம்ம ’நாக்கு’தானுங்க எப்படியென்று கேட்டால் அந்த அளவுக்கு எனக்கு விளக்கமளிக்கத் தெரியவில்லை என்றாலும் ஒரு சிறு உதாரணத்தைச் சொல்கிறேன் உணவில்லாதுச் சோர்ந்த நிலையில் அவசரத்துக்கு ஏதோ ஓர் உணவகத்தில் சாப்பிடுறோம் நல்ல சுவையான உணவகத்தையே தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகிறொம்னே வைத்துகொள்ளுங்கள் , கவனமாப் பாருங்க நல்ல சுவையான உணவைச் சாப்பிடுகிறோம் சுவையை மட்டுமே உணர்ந்து சாப்பிடுகிறோம் அச்சுவையை உணர்த்தியது நமது நாக்கு என்பதையும் உணர்ந்துகொள்கிறோம் . 

அப்படி அந்தத் தரமான உணவகத்தின் சுவை மிகுந்த உணவைச் சாப்பிட்ட நேரத்திற்கெல்லாம் நம் உடம்பில் ஒருசக்திப் பரவும் பாருங்க அதாங்க உடம்பிற்கு இப்பொழுதுதான் தெம்புக் கிடைத்ததுபோல் இருக்கும் . அதாவது சாப்பிட்ட உணவானது இன்னும் முழுவதுமாகச் செரிமானவில்லை ஆனால் உடலுக்குத் தேவையான தெம்பு கிடைத்துவிட்டது, அதெப்படிச் சுவையை மட்டுமே உணர்ந்தோம் ஆனால் உடலுக்குண்டான சக்திக் கிடைத்துவிட்டது. அப்போ அங்கு வேலைச் செய்த்தது நமது நாக்குச் சுவையையுணார்த்தி உடலிலுள்ள உறுப்புகளுக்குத் தேவையான தகவலைத் தந்திருக்கிறது ஆதலால் நமது உடல் உற்சாகத்தில் சக்தியைப் பெற்றது என்று வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 

நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதைக் கருத்தில் சொல்லுங்க மறக்காமல் 


இப்படி உணவகச் சாப்பாட்டால் சக்திப் பெற்ற உடல் அந்த உணவின் செரிமானத்திற்குப் பிறகு எப்படி இருக்கும் என்று பார்த்தால், நீங்களே சொல்லுவீர்கள் அதென்னடா அது சாப்பாடு நல்லாதான் சுவையாக இருந்தது ஆனால் உடம்பை ஏதோ பண்ணுகிறதே என்று புலம்புவதுண்டுச் சரிதானே . உண்மையும் அதாங்க அறுச்சுவையும் நமது உடலைப் பாதுகாக்கும் மாய எந்திரம் ஆகும். சுவைக்காக எதையெதையோ கூட்டிக்கழித்துச் செய்த உணவை உட்கொள்ளும் போதே நம் உடலானது பல சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை ஓரளவுக்குப் புரிகிறது .

உணவகச் சாப்பாட்டால் கொஞ்ச நேரத்துக்கு சக்திக் கூடும் பின்னர்க் குறையுது. அதையே வீட்டுச் சாப்பாட்டில் பார்த்தீர்களென்றால் தலைகீழாக நடக்கும் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டவுடன் சிறு மயக்கம் வரும் அதாங்க ’உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும்’ செரிமானத்திற்குப் பிறகே உடலுக்கு சக்திகிடைக்கும் நீங்களே உங்கள் அனுபவத்தில் தெரிந்துக் கொள்ளலாம் இதையெல்லாம் எது பொய் எது மெய்யென்று .

வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . 

மூன்றாம் பகுதிக்கு : உண்ணுவதெல்லாம் உணவல்ல

கலியுகம்: சரிங்க அதிக வேலைகள இருப்பதால் இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன் மீண்டும் சந்திப்போம். கலியுகம் தொடரும் ...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி