எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!
உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...
என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.
17 கருத்துகள்:
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.
.....ஆழமான அர்த்தங்களை, உங்கள் கவிதையில் காண முடிகிறது. அருமை.
சார் மிக அருமையா இருக்குங்க ...
தொடர்ந்து கலக்குங்க ...
கவித கவித...
உடல் இருக்கும் போதே தேடி முடிக்கும் குழு ஒன்றை ஆரம்பிப்போமா?
Meena said...
உடல் இருக்கும் போதே தேடி முடிக்கும் குழு ஒன்றை ஆரம்பிப்போமா?
நீங்களே சொல்லுங்கள் தோழி உடல் இருக்கும் போது எவ்வுடல் அமைதியை அடைகிறது? அவ்வுடல் எது?
அருமை.
நிறைய யோசிக்க வைக்கிறது கவிதை.
அருமை கவிதையும் படமும்
அருமையா இருக்குங்க.
மறுபடியும் போட்டோ மாத்திட்டீங்க போல... இந்த போட்டோவும் நல்லாத்தான் இருக்கு...
புகைப்படம் அருமை.
நச்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை//
ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய வரிகள். அருமை தினேஷ்
//என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.
//
இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணா !
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!/////
அருமையான வரிகள்...
கவிதை நல்லா இருக்கு தினேஷ்..
ரொம்ப அருமையா இருக்குங்க...
வார்த்தைகள் அருமையா இருக்குங்க!!
ரசிக்க வைக்கும் வரிகள்
கவிதையின் சாரம் மிகவும் ஆழமா இருக்கு தினேஸ்.
கருத்துரையிடுக