கொடிவணக்கம் கொடிவணக்கம்
கோடி கோடி மக்கள் கூடி
தனையிழந்து தேசம் காக்க...
நேசம் கொண்டு மாண்டு மாய்ந்த
உத்தமவாதிகள் உத்தரவில்லாமல்
சூறையாடப்பட்டு சிறைகண்டு
சினம் கொண்டு சீறிப்பாய்ந்த
இளஞ்சிங்கங்கள் எத்துனையாயிரம்...!!
முதல் வணக்கம் எந்தன் முழுவணக்கம்
ரத்தசரித்திர யுத்த பூமியாய்....
நித்தம் காட்சி தரும் ருத்ரதாண்டவம்...!
தேசம் சுமந்து தேசம் சுமந்து
நேசம் வளர்த்து பாசம் செழித்து
பகலெல்லாம் இருளாகி பாடுபட்டு
பெற்ற சுதந்திரம் ஒருநாள் கூத்தாக...!
கூடி நின்று கும்மியடிக்கும்
கூட்டமத்தில் சாட்சி சொல்ல..
சாலரப்படை சகிதம் கம்பீரமாய்
காட்சி வேறு..., துச்சனே....!
சுற்றம் மட்டும் சூழவேண்டும்
சுற்றியுள்ளோன் மாளவேண்டி
யுத்தம் செய்ய எத்தனிக்கும்
உத்தமமிழந்து குறிபார்க்கும்
கூட்டத்துக்கு குடியான தினம்...!!
ஒருநாள் வேடிக்கை,- இதுவே
அவர்களின் வாடிக்கை..!!
யுத்தங்கள் ஆயிரம் சத்தம்
கேளா செவியடைத்து செந்நீர்
பருகும் கூட்டம் மாளுமன்று
திருநாளாய் வருமென்று
திகைப்போடு எதிர்நோக்கி
வசம்பாடி இசைந்து வரும்
வாலில்லா கூட்டமென்று
திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள்
நாளைய தினமாக மாறாதோ...?!
22 கருத்துகள்:
தேசம் காக்க...
தனையிழந்து
மாண்டு மாய்ந்த
அத்துணை தியாக உள்ளங்களுக்கும் எமது வீரவணக்கங்கள்..
உங்களுக்கும் இனிய குடியரசு தின விழா நல் வாழ்த்துக்கள்../
இது கவிதையல்ல...
உணர்ச்சிகளின் ருத்ர தாண்டவம்..
பாரத்... பாரதி... said...
இது கவிதையல்ல...
உணர்ச்சிகளின் ருத்ர தாண்டவம்..
...rightly said. இதை வழிமொழிகிறேன்.
thoughtful poem.well written.first vote from me in indli.
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்....
குடியரசு தின வாழ்த்துக்கள்...
இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்....
//திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள்
நாளைய தினமாக மாறாதோ...?!//
உண்மைதான்
********************************
எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டுள்ளேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளலாம்
>>>திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள்
நாளைய தினமாக மாறாதோ
ம் ம் ஓக்கே
உணர்ச்சிமிக்க வரிகள் ....
நல்லா இருக்குங்க
//திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள்
நாளைய தினமாக மாறாதோ...?!//
மகாகவி பாரதியாரின் கோபத்தின் உச்சம் இது......
இது கவிதை அல்ல,
கடும் சினத்தின் அக்கினி
பொங்கும் எரிமலையின் சீற்றம்....
உணர்ச்சிக் கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு.
திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள்
நாளைய தினமாக மாறாதோ...?!///
உங்களைப்போல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்!
வாழ்த்துக்கள் கிடையாது பங்கு! சொல்லும் நிலையில் நம் நாடு இல்லை!
குடியரசுதின வாழ்த்துக்கள்
உங்களுக்கும் இனிய குடியரசு தின விழா நல் வாழ்த்துக்கள்
தினேஸ்...உணர்வுமிக்க கவிதை.
தேசப்பற்று வரிகளில் மிஞ்சி நிற்கிறது.
வாழ்த்துகள் !
ஆதங்கம்..கோவம் எல்லாம் அற்புதமாய் கவிதை வரிகளில் தெரிச்சிருக்கு தினேஷ்..ரொம்ப நல்லா இருக்கு...
குடியரசு தின வாழ்த்துக்கள்...:) SORRY FOR LATE
அருமை நண்பரே....
சும்மாப் போகவில்லை.உங்கள் எழுத்துக்களைப் படித்தேன். உணர்ச்சிப்பெருக்கோடும், வேகத்தோடும் பதிவிடுகிறீர்கள் நீங்கள் சொல்லவருவதை சரியாகப் புரிந்து கொள்ள முயற்சிசெய்கிறேன். இன்னும் சற்று எளிதாக எழுதலாமோ.? இது என் பார்வைதான். எழுதுவது எல்லாம் புரிந்தால் ரசிப்பில் சுவை கூடும்.
கருத்துரையிடுக