ஞாயிறு, 23 ஜனவரி, 2011

"நேசத் தந்தை...!" ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் )

சாதி மத சாக்கடையில் எம்சமூகம்
மூடநம்பிக்கை புழுக்களைத் தின்று நிதம்
அடிமைப்பட்டு அண்டி பிழைத்து முதுகு
ஆங்கோர் கேள்விக்குறியாய் வளைந்து நெளியும்

வாழ்க்கைக்கு விடுதலை வேண்டியோ வந்தீர்..?!
வங்கத்து புயலாய் தேசம் வளைத்தீர்..!
வருங்கால சுதந்திரம் வாலிபத்தின் கையில்
வருவது கண்டீர்..! வாழ்வது தந்தீர்..!

முடங்கிக் கிடந்த முதுமை எழுச்சிக்காண
முழக்கம் செய்வதும் பழக்கம் இளைஞர்
எழுச்சியின் பாசறை நீர் நேசரே..!
வேங்கையின் வேகம் உமக்கு,- வெகுண்டு

எழும் கோபம் உமக்கு,- நீர்
தொழும் தேசம் நமக்கு நமதென்பது
நாமறிய நாட்டுப்பற்றை நாடெங்கும் விதைத்து
நல்லோர் நெஞ்சில் நீங்கா இடம்கொண்ட

நாயக...! எங்கள் தாயக வேந்தே...!!
முடிசூடா எங்கள் முப்படை தளபதி..!
முன்னோர் செய்தவத்தின் முழுபயன் நீ...!
இன்னோர் வாழ இன்னுயிர் ஈந்தனை

நாடெங்கும் வாழ்ந்தனை இளையோர் நெஞ்சில்
காடாகி வளர்ந்த புரட்சி வித்து ...!
நாடாது போனால் நாடேது இங்கே...?
கூடாத கூட்டத்து சேராது சேர்ந்த

செம்மல் உம்போல் ஒரு சிங்கம்
காணவேண்டும் இன்றைய பாராளு மன்றம்...
வருவாயோ..? வாழ்க்கை தருவாயோ..? இந்திய
இறையாண்மை இறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்...!!

18 கருத்துகள்:

Unknown சொன்னது…

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 114 வது பிறந்த தினம்.... நேதாஜீக்கு எங்கள் வீரவணக்கங்கள்...

Unknown சொன்னது…

//வங்கத்து புயலாய் தேசம் வளைத்தீர்..!
வருங்கால சுதந்திரம் வாலிபத்தின் கையில்
வருவது கண்டீர்..!//
//வேங்கையின் வேகம் உமக்கு,- //
அருமையான வரிகள் தினேஷ்..

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

கவிதையின் இறுதி வரிகள் ஒட்டுமொத்த இந்தியாவின் விருப்பத்தை காட்டுகிறது... நல்ல உணர்ச்சிமிக்க கவிதை தந்ததற்கு நன்றிகள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இன்றைய பாராளு மன்றம்...
வருவாயோ..? வாழ்க்கை தருவாயோ..? இந்திய
இறையாண்மை இறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்...!//


சரியான சமயத்தில் எழுதி உள்ளீர்கள்.......
பாராளு மன்றம் அல்ல அது, ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் மன்றம் அது,
அட போங்கய்யா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நேதாஜிக்கு ஒரு ராயல் சல்யூட் மக்கா............

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீங்கள் ரத்தம் தாருங்கள் நான் விடுதலை வாங்கி தருகிறேன் என்றார் நேதாஜி....
ஆனால் இன்று என்ன கொடுத்தால் இந்த வெக்கமில்லாத தலைவர்களிடம் இருந்து நாட்டை காக்க முடியுமோ தெரிய வில்லை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நல்ல உணர்ச்சிமிக்க கவிதை தந்ததற்கு நன்றிகள்//


கரெக்டு பாரதி...

சாமக்கோடங்கி சொன்னது…

நான் கடைசியாக பதிவிற்கு ஓட்டுப் போட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டன என்று எனக்கு நியாபகம் இல்லை..

ஆனால் உங்களின் இந்தப் படைப்புக்கு ஓட்டுப் போட்டு விட்டே பின்னூட்டம் இட வந்து இருக்கிறேன்..

அருமையான படைப்பு.. தொடரட்டும் நற்பணி..

மாணவன் சொன்னது…

நேதாஜீக்கு வீரவணக்கங்கள்...

அன்புடன் நான் சொன்னது…

கவிதையின் கடைசி வரிகள் நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

மாவீரன் நேதாஜிக்கு என் பிறந்த நாள் வணக்கங்கள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல கவிதையைப்
படித்த நிறைவு.தொடருங்கள் .
உடன் வருகிறோம்.வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

நாடெங்கும் வாழ்ந்தனை இளையோர் நெஞ்சில்
காடாகி வளர்ந்த புரட்சி வித்து ...!
நாடாது போனால் நாடேது இங்கே...?
கூடாத கூட்டத்து சேராது சேர்ந்த

செம்மல் உம்போல் ஒரு சிங்கம்
காணவேண்டும் இன்றைய பாராளு மன்றம்...


......நம்பிக்கையுடன் காத்து இருப்போம்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//செம்மல் உம்போல் ஒரு சிங்கம்
காணவேண்டும் இன்றைய பாராளு மன்றம்...
வருவாயோ..? வாழ்க்கை தருவாயோ..? இந்திய
இறையாண்மை இறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்...!!//

செம ஹாட் ...சூப்பர்

ஆனந்தி.. சொன்னது…

//செம்மல் உம்போல் ஒரு சிங்கம்
காணவேண்டும் இன்றைய பாராளு மன்றம்...
வருவாயோ..? வாழ்க்கை தருவாயோ..? இந்திய
இறையாண்மை இறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்...!!//

இப்படி எல்லாம் உண்மையில் நடந்தால் இப்போ உள்ள நிலைமை பார்த்து நேதாஜி அவர்கள் ரொம்பவே வெறுத்து போய்டுவார் தினேஷ்...அருமையான் பாடல்...

arasan சொன்னது…

நல்ல பதிவுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான படைப்பு.
நேதாஜிக்கு வீரவணக்கங்கள்...

பெயரில்லா சொன்னது…

Simply put i undeniably acknowledge what we should include says. Actually, My partner and i shopped all through ones own various other web content and that i accomplish suppose that you're totally correct. Congratulations on this web web page.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி