
நாடோடி வாழ்க்கை தானடா..!
நடமாடும் பிணம் நாமடா..!
நயவஞ்சகம் நம்மில் ஏனடா..?
நடைபாதை வஞ்சம் தீர்த்தால்
நமக்கு பாதை ஏதடா..?
பனைபோல வளர்ந்திருக்கும்
பாதை மறிக்கும் பேராசை ஏனடா..?
பணம் பறித்து பழிசுமந்து
பகையாலும் உள்ளம் கொண்டு
பாசமில்லா வேஷம் ஏனடா..?
மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!
தனையாலும் எண்ணம் நம்மில்
தரங்கெட்டு தடுமாறி போகுதடா..!
தடை விதித்தால் நலமுண்டு
தகரம் கூட தங்கம் தானடா..!
தட்டி தரம் பிரித்தால் - நம்மில்
தங்க குணம் ஏதடா..?
குரல் கொடுத்தும் திருந்தவில்லை
குணம் மாற குறையுமில்லை
குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..?
கள்ளனுக்கும் மனமுண்டு
கரைதெரிந்தால் குணம்பெறுவான்
கண்ணீரும் வருவதில்லை
கரை ஏனோ தெரிவதில்லை
காட்டாற்று வெள்ளம்போல - பலர்
கண்ணீரில் உயிர் வாழும்
கலங்கமுற்ற வாழ்க்கை ஏனடா..?
கலியுகம் : தனிபட்ட நபர்களை பற்றிய வரிகள் அல்ல நம்முடைய அரசியல் சாக்கடை வாசிகளை பற்றியது பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே ... கலியுக வதம் தொடரட்டும்
26 கருத்துகள்:
சரியான நேரத்தில் சரியான கவிதை...
இந்த கேள்விகள் தேவை தான் நண்பா..
//கள்ளனுக்கும் மனமுண்டு
கரைதெரிந்தால் குணம்பெறுவான்
கண்ணீரும் வருவதில்லை
கரை ஏனோ தெரிவதில்லை
காட்டாற்று வெள்ளம்போல - பலர்
கண்ணீரில் உயிர் வாழும்
கலங்கமுற்ற வாழ்க்கை ஏனடா..?//
எதற்கும் கலங்கா மனம் எவருக்கும் அருள மாட்டாயா அம்மா பார்வதி தேவி?
எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com
கல்யாணத்துக்குள்ள கேட்டு முடிசுருங்க! அப்பறம் கோவமே வராது! பழகிரும்!
..குரல் கொடுத்தும் திருந்தவில்லை
குணம் மாற குறையுமில்லை
குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..?..
நல்ல கேள்வி...
வதம் தொடரட்டும்...
கலக்கல் தலைவரே அடிக்கடி எதிர்பார்க்கிறேன்
சுர்ருன்னு இருக்கு கேள்விகள்
Anonymous said...
எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com
வாங்க வணக்கம் அனானி அவர்களே குறட்டை புலி உலாவரலாம் சினம் கொண்ட சிங்கமிது சிக்கிகொண்டால் கடினம் தான்
அதிரடி கவிதை....!
பதில்?? :((((
அட விடுங்க பாஸ்...இதெல்லாம் நமக்கு புதுசா? வழக்கமா பாக்குறதுதான... இந்தியர்களின் தலைஎழுத்து இல்லையா இவை
அதிரடி வதம் தொடரட்டும்...
வணக்கம். இன்னிக்குதான் இந்தப்பக்கம் வந்தேன். நல்லா நிதானமா படிச்சிட்டு கருத்து சொல்றேன்.
//மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!
//
//குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..//
எனக்குப் பிடித்த வரிகள் ..!
ரொம்ப நல்லா இருக்குடா. அய்யய்யோ...நல்லா இருக்குங்கோ.
அன்பு தோழமைக்கு வணக்கம்.... என்ன சொல்ல...? ஒவ்வொரு வரியும் சாட்டையாய் சுழல்கிறது.....சவுக்கடியாய் விழுகிறது. மதிகெட்ட மனிதர்கள் நம்மை பாதை மாற்றி போடும் அவலங்கள் நீங்க வேண்டும். உலக்கை கொண்டு அடித்தாலும் இவர்கள் திருந்துவார்களா..? மாட்டார்கள். ஏனெனில் இங்கே மிருகங்களின் வாடை அடிக்கிறது. மனித தோல் போர்த்திய மிருகங்கள் நம்மை கெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு வகையில் இந்திய குடி மகன்களின் பேராசையும் இதற்கு முக்கிய காரணம். நாம் நம்மை சரியாக வைக்காத வரைக்கும் பிறரையும் குறை சொல்லி பயன் இல்லை.
நாளை சமுதாயம் நல்ல தமிழ் சமூகமாக மாற நம்மால் இயன்றதை முயன்று செய்வோம்....
வளரும் தமிழ்.... வாழ்வான் தமிழன்.
மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!
இந்த வரிகளை என்ன சொல்வது...
கோபம கொப்பளிக்கும் வைர வரிகள்..
good rhyme. yr angry along the social awarness exposing. congrats
this new year may b bright to u
சூதானமா வதம் தொடரட்டும்...
//மதிகெட்டு மானம் விற்றுமாயையான வாழ்வை விட்டுமரணித்து கிடக்கையிலேமலர் கைகொட்டி சிரிக்குதடா..//
அசத்தலான வரிகள்.
நேற்றைய கவிதையில் 8 முறை டி என விளித்துள்ளீர்கள். இன்று 13 முறை டா என்று சொல்லீயிருக்கிறீர்கள். என்னமோ நடக்குது. கோபத்த கொறைங்க தினேஷ்.
// சினம் கொண்ட சிங்கமிது சிக்கிகொண்டால் கடினம் தான்//
அய்யோ அம்மா, பயமாயிருக்குது... கலி முத்திப்போச்சு..
போட்டுத்தாக்கு.........
அசத்தலான அருமையான வரிகள் சகோ
////மதிகெட்டு மானம் விற்றுமாயையான வாழ்வை விட்டுமரணித்து கிடக்கையிலேமலர் கைகொட்டி சிரிக்குதடா..////
சான்ஸே இல்ல
கருத்துரையிடுக