திங்கள், 24 ஜனவரி, 2011

"வினையறுத்தக் காதல்...!"



சரீரம் என்றுமே சாம்பல் தானடி..!
முற்களாய் துளைக்கும் சொற்கள் ஏனடி...?
கல்லுக்குள் இருக்கும் தேரை நானடி...!
உன்னுள் இருக்கும் இறக்கும் மாயம் ஏனடி..?

உடனும் தொடர்வேன் உயிராய் படர்வேன்
கரையாய் அமர்வேன் உன் எல்லைகாக்க,
மற்றோர் மனம் உணரும் மாந்திரீகன்
சிற்றாரின் சிநேகிதன் உன்னுள்..?

கருவாட்டு வாசம் காகிதபூ பேசும்
கல்லெறியும் மோகம் கரைசேரா தாகம்
கானமிலா ராகம் கருவிழிகள் பாடும்
சிலிர்க்குமடி என் தேகம்...!

சிந்தனைகள் வீசும் கரும்பாக பேசும்
களிப்பான தனிமையிலும் என்னுள் ஓர்குரல்...!
யாரென அறியேனே பித்தனாகிய காட்சிதனில்
கரைகலற்று ஓடும் காட்டாறு..!

அற்றில்லா பற்றில்லா அன்பில்லா ஆசையில்லா
அனலடிக்கும் கனலாகும் காற்றுக்கும் வேடமிடும்
வீழ்ச்சிகளின் தொடர் சூட்சமத்தின் நிழல்
சூழ்ந்திருக்க சூதன பறவையாவேன்...!

சுட்டெரிக்க சாம்பலாக சுற்றிவந்து வட்டமிட்டு
விண்ணுக்கும் மண்ணுக்கும் செப்பனிட்ட பாலமொன்று
காலனுக்கும் கப்பமுண்டு காத்திருக்கேன் விண்வழியே
உனை துறந்து வா வெளியே...!!

9 கருத்துகள்:

Chitra சொன்னது…

அற்றில்லா பற்றில்லா அன்பில்லா ஆசையில்லா
அனலடிக்கும் கனலாகும் காற்றுக்கும் வேடமிடும்
வீழ்ச்சிகளின் தொடர் சூட்சமத்தின் நிழல்
சூழ்ந்திருக்க சூதன பறவையாவேன்...!


.....இந்த மாதிரி எழுத, சிறந்த தமிழ்புலமை வேண்டும். உங்களிடம் நிறையவே இருக்கிறது.... நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவங்க!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சுட்டெரிக்க சாம்பலாக சுற்றிவந்து வட்டமிட்டு
விண்ணுக்கும் மண்ணுக்கும் செப்பனிட்ட பாலமொன்று
காலனுக்கும் கப்பமுண்டு காத்திருக்கேன் விண்வழியே
உனை துறந்து வா வெளியே...!!///

அடடடா எங்கிருந்து வந்து கொட்டுது மக்கா இவ்வளவும்....
அட்டகாசம் மந்தகாசம் மதிகாசம் மனகாசம் எமகாசம்....ஓ மூச்சு முட்டுது....

Philosophy Prabhakaran சொன்னது…

வார்த்தைகளின் விளையாட்டு ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறது அண்ணா...

ஆனந்தி.. சொன்னது…

அருமையான இலக்கிய நடை..அற்புதம் தினேஷ்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

//கருவாட்டு வாசம் காகிதபூ பேசும்
கல்லெறியும் மோகம் கரைசேரா தாகம்
கானமிலா ராகம் கருவிழிகள் பாடும்
சிலிர்க்குமடி என் தேகம்...!//

இலக்கியம் சொட்ட ஒரு கவிதை.
நண்பர்கள் இருவரும் பேசி வைத்துப் போட்டீர்களோ?

ஆர்வா சொன்னது…

அழகான கவிதை நிறைய அர்த்தங்களுடன்... அருமை தினேஷ்

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இலக்கியம் சொட்ட ஒரு கவிதை.
நண்பர்கள் இருவரும் பேசி வைத்துப் போட்டீர்களோ?/

ஹா ஹா ஹா இல்லை குமார் இது அவரே போட்டது,
சூப்பரா இருக்கு இல்லையா....

Unknown சொன்னது…

அழகான கவிதை

Thoduvanam சொன்னது…

அருமையான நடை.உள்ளத்து காதல் உணர்ச்சி பொங்குகிறது.வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி