
தமிழக அமைச்சா... தமிழக அமைச்சா...
தரங்கெட்டு போவதேனோ...?
தன்னுடல் விற்று
தன்குடில் காப்பவள் கூட....
மாசற்ற மனம் கொண்டாள்..!
வடக்கே விற்று வழக்கே
இல்லா கிழக்கே குவித்த
பணகுவியலாய் பிணக்குவியல்...!?
மாண்டு போக தமிழன்
வரம் பெற்றானா..? மண்ணை
மதித்து மானம் காக்கும்
மறத்தமிழன் மாளவில்லையடா...!
மானுட மிருகமே....
குறுக்கு வழியில் கொழித்து
கோபுர மாக்கல் செழிக்க
இன்னும் எத்துனை கோடி
கொள்ளையடிப்பாய்...!
குருட்டு மிருகமே....
சூளுரைத்து வாள்பிடிக்க
ஆளில்லை...! ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்,- கடுதாசி
எழுதியுள்ளேன் கருணைமனு
கொடுத்துள்ளேன்..
சிறைபிடித்தாயோ எம்மண்ணை..?!
சிருங்காட்டு 'ச்சீ'வனமே...
சினம் கொள்ளும் நிலைக்குள்
சீர்படுத்த எத்தனித்து எதிர்கொள்...
ஆயிரமாயிரம் போர்க்கருவிகள்
அடக்கமாகும் உன்னத தமிழர்களின்
அகத்துள் அகம் கொண்ட சினம்
புறம் காண நினைத்துவிடின்...
ஆயிரம் தலை கொல்லும்
ஆற்றலும் படைப்பான் அழிவை
நோக்கிப் பயணிக்காதே...!
மயானமாகும்......
மாற்றம்கொள்...,
போற்றுவானே தூற்றுவான்
தூற்றுவானே ஏற்றுவான்.
பொறுக்கா மனம்கொண்டு
பொறுக்கும் உன்னை...
போற்றிச் சொல்லா மானுடம் பிறக்க
மாறும் வனத்தில் மீறும்
மிருகம் மிகையில்லா பகையாகும்.
மீள்வதரிது... மீட்டெடு எந்தன்
மீனவ மக்களை..., இல்லையேல்
துடுப்பேந்தும் கைகளும் துப்பாக்கி ஏந்தும..!!
மனதில் வைத்துக்கொள்..........
