எனக்கில்லை எனக்கில்லை - ஆமாம்
1 . நகைச்சுவைப் பதிவுகள்.
சுட்டு சிரிக்குது சட்டியிலே குழம்பு
சட்டுன்னு வாடிப் புள்ள ஒய்யாரமா
பட்டு சீலைக்கட்டி பார்க்க உன்னை
கோமாளி வேசமிட்டு சிரிக்கவைக்கேன்
2 . கவிதைகள்
காதல் கவிதை வாசிக்க தடம்புரளும்
வரிகளின் தாகம் சமூகச் சிந்தனைகளைத்
தூண்டும் புதுப்பிறவியாய் புனிதம் தேடும்
புவியனாய் அகத்தெளிவு
3 . விழிப்புணர்வு
அங்கே வரான் இங்கும் தரான்
எங்கே போச்சு வானம் பூமி
விழித்து நட விடிந்ததெங்கும்
விடியல் நிலை பேசும்
4 . கதைகள்
ஒரே ஒரு காட்டுக்குள்ள
ஒத்தப் புள்ள குள்ள நரியாம்
சுத்தி திரியுர வேளையில சாய
சட்டியில வீழக் கண்டேன்
5 . அனுபவம்/பயணக்கட்டுரை
நானும் நடக்கிறேன் நாளும் கடக்கிறேன்
சேர்ந்துப் பகிர்வோம் நாளுமிங்கே
வருவோர் காண்பர் கண்சிமிட்ட
உதவும் வரிகளாய் பதியட்டுமே
6 . அரசியல் கட்டுரை
ஆட்சி நடக்குது மத்தியில ஆளான
நானும் தான் ஓட்டுப் போட்டேன்
அடிமையா நினைக்க அகங்கொதிக்க
வாளும்தான் பிடிக்க சூளுரைப்போம்
7 . திரை விமர்சனம்
முகவரி அறியாமா முகமூடி போடுவாங்க
சுயவரியல்லாம சுனை நீரல்லும் காட்சியாய்
காலத்தை மாத்துவாங்க வெள்ளித் திரையிலே
வேடிக்கை பார்க்க வாடிக்கையாய்
8 . தொழில்நுட்பம்
அரிதென்பார் அவனியிலே புதிதென்பார்
தொழில் நுட்பம் தெரியாமல் வாங்கிவிட்டால்
தின்டாட்டம் தான் அவனுக்கு கொண்டாட்டம்
அரியவை அறிய அனுதினம்
9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
அறிமுகம் ஆனது எங்கே எங்கே
நான் அவையில் அரிதாரம் பூசியது
இணையத்தின் நட்பினில் இனியவனாய்
என்றும் அன்புடன் இங்கே இங்கே.....
காணா தேசத்தே கடல் கடந்து பயணிக்கும் சில நட்புக்கரங்களின் இணையமான டெரர்கும்மி 2011 விருதுகளில் தங்களது பதிவுகளை இணைத்து பரிசுகளை அள்ளுங்கள் பதிவர்களே
7 கருத்துகள்:
Present Sir
ஹா ஹா ஹா ஹா எல்லாமே புதுமை அத்தனையும் அருமை...!!!
ஏ யப்பா இப்பமாவது புருஞ்சுதே ஹி ஹி...
நான் போட்டிக்கு பதிவை அனுப்பியாச்சு, உடனே பரிசை அனுப்பி வையுங்க ஹி ஹி...
சொக்கா சொக்கா ஆயிரம் நூறு
எனக்கில்லை எனக்கில்லை கதிரவன் கதைசொன்ன தினேஷ்குமாருக்கே.
சரிதானா???
இப்படித் தாங்க நானு
விழிப்புணர்வுக் கவிதை,
காதல் கவிதை,
அனுபவக் கவிதை ன்னு
விதவிதமா upload பண்ணிருக்கே,
ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாயிங்க
ViswanathV said...
இப்படித் தாங்க நானு
விழிப்புணர்வுக் கவிதை,
காதல் கவிதை,
அனுபவக் கவிதை ன்னு
விதவிதமா upload பண்ணிருக்கே,
ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாயிங்க
வணக்கம் விஸ்வநாத் ....
கவிதைப் பிரிவில் மட்டும் தான் கவிதைகளை இணைக்க முடியும் அங்கு எப்படியாயினும் கவிதைக்கு என்று தனி சிறப்பு என்றும் எங்கும் உண்டு தங்களுடய சிறந்த கவிதையை இணையுங்கள் கவிதைகள் பிரிவில்...
தலைவரிகளை கொஞ்சம் பாருங்க
*"சொக்கா சொக்கா ஆயிரம் நூறு எனக்கில்லை எனக்கில்லை - ஆமாம்"*
கருத்துரையிடுக