கார விழி பார்வையிலே
கரும்பும் கசக்குதடி-நின்னை
காணாத நாழிகையில்
குரும்மிளகு இனிக்குதடி-நின்
மீளாப் புன்னகையில்
குயில் கூவ மறந்ததடி-வின்
வியக்க குரல் கேட்டு..!
வலியும் சுகம் சுமக்குதடி-நீ
வரும் கடைகால நினைவினிலே
உடல் கிழிந்த கோலமடி-என்
உயிர் மட்டும் பேசுதடி
எமன் அழைக்கும் நேரமடி-நீ
எங்கிருக்காய் என்னவளே
சதி செய்த சாதிவெறி-என்
உடல் ருசித்து பசிதீர்த்ததடி
எவன் படைத்த சாதியடி-தினம்
குருதி சுவைக்க போகுதடி
மதிவெல்லும் உலகமடி-இனி
மாறவேண்டும் சாதிவெறி
களங்கமில்லா காதலடி-என்
உடல் மட்டும் மரணித்து
உயிர் மட்டும் பேசுதடி....!
டிஸ்கி : இது ஒரு மீள் தானுங்க சுவைத்து பாருங்க உங்க மூளைக்கும் விருந்து
14 கருத்துகள்:
கவிதை அருமை
ம் ...
சிந்திக்கவும் வைத்த கவிதை...
யோசிக்க வைக்கும் கவிதை தல.. இதை பற்றி நாளை பேசுவோம்...
கவிதை அருமை....
தயவு செயது டிஸ்கி என்பதை தமிழ்படுத்துங்கள். இல்லை என்றால் disclosure என ஆங்கிலத்தில் போடுங்கள். இரண்டையும் கந்து டிஸ்கி என்பது நெருடுகிறது.
இதனை குறிப்பு, அல்லது வெளிப்பாடு என எழுதலாமே ... நன்றிகள்
நல்லா இருக்குங்க....
கவிதை அருமை....
அருமை பங்கு :)
கவிதை அருமை....
super kavithai!
களங்கமில்லா காதலடி-என்
உடல் மட்டும் மரணித்து
உயிர் மட்டும் பேசுதடி....!////
சூப்பர் வரி...கலக்கல்
உண்மைலேயே மீள் பதிவானாலும் நான் இப்பத்தான் படிக்கிறேன் ..
நல்லா இருக்கு
//கரும்பும் கசக்குதடி-நின்னை
காணாத நாழிகையில்
//
/வலியும் சுகம் சுமக்குதடி-நீ
வரும் கடைகால நினைவினிலே//
வலியும் சுகம் சுமக்குதடி .. செம டச்சிங்..!
ஒன்பது தடியும் மூன்று மடியும் ஒரு யடியும் ஒரு லடியும் இணைந்தால் கிடைக்கும் தினேஷ் கவிதை.
புரியலியா தினேஷ்?
மூளைக்கு விருந்து.
உங்களுக்கு கவிதைக்கென
மினி பத்மபூஷன் பரிசுக்கு
பரிந்துரைக்கலாம் போல் தோணுது
கவிதையில் முதிர்ச்சி தெரிகிறது
கருத்துரையிடுக