
காலை கனியும் அந்திமக் கதிரில்
மலர்சூடும் மாலை மஞ்சள் வெயில்
வழித்தேடும் விழிதனில் வினவா அழைப்பு
விடையில்லா பிரிவா புரியும்...?
இரவின் உறக்கம் இமைகளோ மறுக்கும்
கனவினில் பறக்கும் மனமெல்லாம் இனிக்கும்
தண்ணீர் தகிக்கும் அடுப்பனல் குளிரும்
தீஞ்சுடர் தாங்கும் கரங்கள்...!
உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்
பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.
இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.
12 கருத்துகள்:
வடை வாங்க வந்துட்டோம்ல ....
கலக்கல் தல....நம்ம கவிதையையும்??????? கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....
காதலர் தின வாழ்த்துக்கள் சகோ
//பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.//
சூப்பர் மக்கா இப்போதான் அருமையா புரியுது.....
கலக்கல்....
happy valentine's day.
நன்று... கதலர் தின வாழ்த்துக்கள்...
அருமையா இருக்கு அண்ணா..
சமீபத்திய கவிதைகளால் கொஞ்சம் புரிந்த கவிதை..
கலக்கல். அருமையா இருக்கு.
கவிதைக்கேற்ற அருமையான படம்
கவிதை அருமை...
தினேஷ்.. உலவு, தமிழ் 10 ல இணைக்கலை போல...?
பிப்ரவரி 14 காலைல எங்கே போய் இருந்தீங்க?பதிவை எதிர்பார்த்தேன். ஃபிகரோட கிளம்பிட்டதா கேள்விப்பட்டேன்
நம்ம ராம்சாமி அண்ணன் உங்க புக் , கவிதை மேடர் எல்லாம் சொன்னாரு. லேனா தமிழ்வாணன் மணீ மேகலைப்பிரசுரம் கிட்டே சொல்லி இருக்கேன் ,, வெயிட்
படமும் கவிதையும் அழகு !
கருத்துரையிடுக