சனி, 12 பிப்ரவரி, 2011

எந்தன் துணையவளே...!


கன்னி மயிலே...! கொஞ்சும் கிளியே...!
கோவைப்பழமாய் என்னை கொத்திச் செல்லடி
கானக் குயிலே காணா மறையேன்
சோளக்கதிராய் என்னை கொரித்துச் செல்லடி

பருவச் சிலையே...! பூங்கா வனமே...!
மல்லிச்சரம் யான் சூடிக் கொள்ளடி
பாசமழையே பச்சைக் குழந்தாய்
தாவிக்கொள்ளடி தாயாய் அணைப்பேன்

சிட்டுக்குருவி மென் இசையருவி
திணையருப்பாய் எந்தன் இதயத்திலே
தினம் இசைப்பேன் இன்பஇயல் தொடுப்பேன்
இனியவளே...! எந்தன் துணையவளே...!

மலர் பறித்தேன் அள்ளி சரம்தொடுத்தேன்
உந்தன் கரம் பிடிக்க மாயமென்ன
கண்ணில் மறைவதென்ன மாயையன்றோ
மனதின் தேடலன்றோ ...............

கலியுகம் : இருமனம் இணையும் மறுகணம் மறையும் மீளில்லா வாழ்வுதனில் மீட்டெடுக்கும் நினைவு மட்டும் வழிநடத்தும் வருடங்கள் கரையும் வாழ்நாள் முடிவினில் நினைவலை ஓட்டும் படச்சுருள் இனியேனும் நிகழாகட்டும் ............

12 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க..

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க.

ம.தி.சுதா சொன்னது…

தங்கள் வரிகள் மிகவும் ஈர்ப்புடையவை..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Unknown சொன்னது…

ஹலோ யாருங்க அது, கொத்தித்தின்னவும், கொரித்துச் செல்லவும் சீக்கிரம் வாங்க. தினேஷ் கூப்பிடுறாருங்க...

தினேஷின் வருங்கால துணைவி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு.

Unknown சொன்னது…

இந்த கவிதை புரியுதுங்க.. ரொம்ப நல்லாவே புரியுது..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தினேஷ்.. நாளைக்கு லவர்ஸ் ஸ்பெஷல் கவிதையா போட்டு தாக்குவீங்கன்னு எதிர்பார்க்கிறேன். மரபுல ஒண்னு புதுக்கவிதைல ஒண்ணு புகுந்து விளையாடுங்க

வினோ சொன்னது…

நல்லா இருக்கு தினேஷ்...

Ram சொன்னது…

கவித கவித

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் மக்கா இப்பதாம்லே கொஞ்சம் புரியுது.....
பாரதியார் ரேஞ்சிக்கு,
கவிதையா இது பாடலா.....

Philosophy Prabhakaran சொன்னது…

// தினேஷின் வருங்கால துணைவி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. //

ஓ அதான் மேட்டரா... நடக்கட்டும் நடக்கட்டும்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி