செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ருத்ரம் ...


நித்திரை பூவிழி சித்திரம் தேடுது
மரக்கிளை வாழி கான மயக்கத்திலே
நிந்தனைத் தூண்டும் சந்தன சுகந்தம்
ருத்ரனவர் காணும் மயிலே

பருவத் தடையா பார்வைப் பிழையா
பாவையின் வழிதனிலே பார்வையிழந்தான்
தன்னிலை மறந்தோன் தாரண மந்திரம்
தாங்கும் எந்திர மாவதே

உருகும் மெழுகின் திரியாய் எரியும்
சுடரில் படரும் காரிருள் போர்தனைத்
தூண்ட வென்றதிருவரில் யவரறிவர்
வேண்டுவோர் தானமிங்கு

கற்றோன் மறைவான் சூழலின் கனலில்
சுற்றம் மறந்தோர் காணுயிர் மாளும்
நீண்ட வனத்தினுள் நிலமத்தில் நீரின்றி
தவிப் படங்கும் தாகம்

16 கருத்துகள்:

Chitra சொன்னது…

பருவத் தடையா பார்வைப் பிழையா
பாவையின் வழிதனிலே பார்வையிழந்தான்
தன்னிலை மறந்தோன் தாரண மந்திரம்
தாங்கும் எந்திர மாவதே


.....தமிழ் வளமையுடன், சிறப்பாக உங்கள் கவிதையில் வலம் வருகிறது.

மதுரை சரவணன் சொன்னது…

arumai. vaalththukkal

எஸ்.கே சொன்னது…

வார்த்தை வளங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கிறது நண்பரே!

ஹேமா சொன்னது…

தினேஸ்...என்ன சொல்கிறீர்கள் என்று புரியாவிட்டாலும் தமிழை ரசிக்க வைக்கிறீர்கள் !

Philosophy Prabhakaran சொன்னது…

சத்தியமா புரியல...

Meena சொன்னது…

உங்க கவிதை முழுசா புரியல. ஆனா நானும் தன்னிலை மறந்து
தாரண மந்திரம் தாங்கலாமான்னு யோசிக்கிறேன். தாகத்தை
தீர்த்துக்க வேறு வழி என்னென்ன என்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..கற்றோன் மறைவான் சூழலின் கனலில்
சுற்றம் மறந்தோர் காணுயிர் மாளும்
நீண்ட வனத்தினுள் நிலமத்தில் நீரின்றி
தவிப் படங்கும் தாகம் ..

நல்ல வரிகள்... இதை 5 முறை படித்ததற்கு பின் தான் அருமை புரிந்தது...

karthikkumar சொன்னது…

உங்கள் வார்த்தை பிரயோகம் அருமை பங்கு :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

//உருகும் மெழுகின் திரியாய் எரியும்
சுடரில் படரும் காரிருள் போர்தனைத்
தூண்ட வென்றதிருவரில் யவரறிவர்
வேண்டுவோர் தானமிங்கு//

wow... arththam purithu padiththaal inikkum ungal kavithaikal... artham puriya niraiya thatavai padikka vaikkinrana...

neengalum DISKI podalaam... enthai karuvaga vaiththu ezhuthiya kavithai endru...

padikkum ellarukkum pidikkum ungal kavithai.

பெயரில்லா சொன்னது…

ஆஹா என்ன இது இவ்வளவு அழகான வாக்கியங்களோட...சூப்பர்

சத்ரியன் சொன்னது…

கோணார் தமிழ் உரை வாங்கிட்டு வந்துடறேன் நண்பா.

மாணவன் சொன்னது…

இலக்கியத்தனமான வரிகளில் கவிதை ருத்ரதாண்டவம் ஆடுகிறது சூப்பர் நண்பரே

தமிழுக்கு பெருமை... :))

உங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar சொன்னது…

Difficult words..! So unable to catch up little somewhere.

My wishes for the next one.!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ் கவிஞன் நீ மக்கா........
தமிழ் அருமையாக வளைகிறது உங்களிடம்.......

வைகை சொன்னது…

மாணவன் said...
இலக்கியத்தனமான வரிகளில் கவிதை ருத்ரதாண்டவம் ஆடுகிறது சூப்பர் நண்பரே

தமிழுக்கு பெருமை... :))

உங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்/////

நாங்க சொல்ல வேண்டியதெல்லாம் ஒரே ஆளா சொன்னா எப்பிடி?

Unknown சொன்னது…

இலக்கிய நயமிக்க வரிகள். நல்ல கவிதை..
ஏன் அடுத்த பதிவுக்கு இரண்டு நாள் இடைவெளி..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி