உலகில் அனைத்தும் படைத்தே உணர்வுகளால்
உன்னை படைத்தேன் அகம் கொண்ட
சுயமுன்னில் புறத்தே அழிவினை விதைத்தோ
பழியினை ஏற்கும் மானிடா..!
நிலை யில்லா உடல்கொண்டு நிம்மதியின்றி
அலைகிறாயோ ஏன்? நிறம்மாறி பயணிக்கும்
பச்சோந்தி பசிதனில் இச்சைகள் ஆயிரம்
பொறுத்து பொறுத்து பொய்யானதோ...?!
மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?
கலியுகம் : மன்னிக்கவும் நண்பர்களே வேலைப்பளு அதிகமுள்ளதால் கணினியில் கவனம் செலுத்த முடியவில்லை..... முடிவில்லா உலகில் இதுவும் ஒரு மீள் உன்னை மீட்டெடு முதல் முழுமையடைந்தால் மூர்கமும் மீளா சாமாதியடையும்
12 கருத்துகள்:
மீண்டும் வாசித்தேன்.... சூப்பர்!
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ?
வித்தியாசமான சிந்தனை
நல்ல சொல்லாட்சி
வாழ்த்துக்கள்
வேலைகளை முடித்து விட்டு சீக்கிரம் வாங்க
..மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?..
அற்புதம்...
ஒற்றை வார்த்தையில் கருத்துச் சொல்லும் அளவிற்கு ஒன்றும் குறைந்து விடவில்லை உங்கள் கவிதை.. அது உள்மனதை ஆழப்பாதித்திருந்தால் நிச்சயமாய் நிறைய வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்..! மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.. நல்ல சொல்லாட்சி என்று ரமணி அவர்கள் கூறியிருக்கிறார்கள்..! அதுபோலவே கவிதை கூறும் கருத்தும் இனிமை.. வாழ்த்துக்கள்..!
>>>மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?
அற்புத வரிகள்
பங்கு...எங்களுக்கும் கவிதை எழுத சொல்லிகொடுங்க...
அற்புதம் .
வார்த்தை, எழுத்து புரட்சியின் சிகரம் நீர் மக்கா அற்புதம்.....
//பங்கு...எங்களுக்கும் கவிதை எழுத சொல்லிகொடுங்க...//
பக்கத்துல இருக்குற எனக்கே சொல்லிக்குடுக்க அவருக்கு நேரமில்லைய்யா பாவம்.
வேலை அதிகமா இருக்குனு சொன்னதாலே நானும் கொஞ்சம் பொருத்து காத்திருக்கேன்....ரெண்டு நாளா நானும் போன் பண்ணலை...[டிஸ்டப் பண்ண வேண்டாமேன்னுதான்]
சித்ரா இன்னைக்கு வடையா அள்ளிட்டு இருக்காங்களே...............!!!
இன்னைக்கு நான் போன எல்லா தளத்துலையும் வடை சித்ராவுக்குதான்.....!!!
முதல் முறை வாசிக்கிறேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக