சனி, 25 டிசம்பர், 2010

உன்னுள் நானிருக்க ...!


வெட்டித் தீர்த்த பாவமெல்லாம்
கொட்டித் தீர்க்க புகுந்தாயோ..!
உன் பாவ சுமையெல்லாம் - அவன்
சுமக்க என் பாவம் செய்தானோ..!

வேண்டுவன கிட்டிவிட்டால்
வேண்டாத ஆசையெல்லாம்
வேள்விகளை தூண்டிவிட
வீற்றிருக்கும் அரையினிலே

வெட்கி போகும் அவனுருவம்
அடிபட்டு பதப்பட்டு அல்லோலபட்டு
அபிஷேகம் கேட்டானா..?
அரிதாரம் கேட்டானா...?

உலகளந்த கலைப்பிலே
ஓய்வெடுக்க தனியறை..!
கேட்டதுதான் குற்றமா...?
கேள்விக்கு இறையாகி விட்டானே...!

துன்ப பட்டால் தூற்றுகிறாய்
இன்ப பட்டால் போற்றுகிறாய்..!
நான் படைத்த படைப்புகளிலே
எனக்கே படைப்பளித்தவன் நீயே...!

எனை புறம் தேடி பயணிக்கும் - நீ
உன் அகத்தே எனை கண்டுகொள்ள
மறந்ததேனோ மானிடா..! - மாற்றமாய்
உன் அகத்தே தேடிப்பார் எம்மை.

உணர்வில் உண்மையும் அறிவாய்
உண்மையில் உம்மையும் அறிவாய்
உம்மால் உலகையும் அறிவாய்
உலகில் எம்மையும் அறிவாய் - நீ

7 கருத்துகள்:

Meena சொன்னது…

// உணர்வில் உண்மையும் அறிவாய்
உண்மையில் உம்மையும் அறிவாய்
உம்மால் உலகையும் அறிவாய்
உலகில் எம்மையும் அறிவாய் - நீ //

புரிந்த மாதிரி இருக்கிறது
அறிவு புகட்டியதற்கு நன்றி

Meena சொன்னது…

// எனை புறம் தேடி பயணிக்கும் - நீ
உன் அகத்தே எனை கண்டுகொள்ள
மறந்ததேனோ மானிடா..! - மாற்றமாய்
உன் அகத்தே தேடிப்பார் எம்மை.//

தேடறேன் சார். ஞாபகப் படுத்துவதற்கு நன்றி

வினோ சொன்னது…

/ உணர்வில் உண்மையும் அறிவாய்
உண்மையில் உம்மையும் அறிவாய்
உம்மால் உலகையும் அறிவாய்
உலகில் எம்மையும் அறிவாய் - நீ /

என்னை அறிவாயா நீ?

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதை நன்று...

ப்ரோபைல் போட்டோ மாற்றியதற்கு எனது கடும் கண்டனங்கள்... பழைய போட்டோ இதைவிட நல்லா இருந்தது... இந்த படத்துல எதோ அடியாள் மாதிரி நிக்கிறீங்க... தயவு செஞ்சு பழைய போட்டோவையே வச்சிடுங்க அப்படி இல்லைன்னா வேற போட்டோ மாத்துங்க...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

துன்ப பட்டால் தூற்றுகிறாய்
இன்ப பட்டால் போற்றுகிறாய்..!
அருமையான கவி நண்பரே..

karthikkumar சொன்னது…

மொத்தமும் அருமை குறிப்பாக கடைசி 4 வரிகள் :)

பெயரில்லா சொன்னது…

:)
arumai

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி