வெள்ளி, 24 டிசம்பர், 2010

தெம்மாங்கு ....




கழனியிலே களையெடுக்கும்
கன்னியரின் கலகலப்பில்
குயில் பாட மறந்ததுவே - எம்
கன்னியரின் பாடலிலே

பாட்டொன்று பறந்து வரும்
பட்டாடை கட்டிக்கிட்டு
பக்கவாத்தியம் ஏதுமில்ல
படையாலும் மன்னன் கூட
எனையாளும் தமிழ் மலர
பாலகனாய் மாறிடுவான்....!

அந்திசாயும் மாலையிலும்
சும்மாடு தலையில் வைத்து
அடுப்பெரிக்க விறகு சுமந்து
வீதியிலும் நடக்கையிலே
விட்டில் பூச்சி வெளிச்சத்திலே
வீடு வந்து சேர்ந்திடுவா
வீட்டில் சோறு பொங்கிடுவா
விளையாட்டாய் படித்த பாட்டில்
ஊரெல்லாம் தூங்க வைப்பாள்
உணர்வுள்ள தமிழச்சியாய்...!!

18 கருத்துகள்:

Unknown சொன்னது…

அந்திசாயும் மாலையிலும்
சும்மாடு தலையில் வைத்து
அடுப்பெரிக்க விறகு சுமந்து
வீதியிலும் நடக்கையிலே
விட்டில் பூச்சி வெளிச்சத்திலே
வீடு வந்து சேர்ந்திடுவா
வீட்டில் சோறு பொங்கிடுவா
விளையாட்டாய் படித்த பாட்டில்
ஊரெல்லாம் தூங்க வைப்பாள்
உணர்வுள்ள தமிழச்சியாய்...!!////////

ரொம்ப நல்லா இருக்கு தினேஷ்.. :)

karthikkumar சொன்னது…

அருமை பங்கு :)

வைகை சொன்னது…

பங்கு ஊர கண்ணு முன்னாடி கொண்டு வர்றீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நம்ம ஊரு...நல்ல ஊரு......!!!

சென்னை பித்தன் சொன்னது…

மண்ணின் மணம் கமழும் கவிதை!

வினோ சொன்னது…

பொங்கி போட்டு தூங்க வைக்கிறீங்களே தல..

Unknown சொன்னது…

இந்த பாடலில் கவிஞர் தினேஷ், ஒரு கிராமிய சூழலை எடுத்துக்காட்டி அதன் மூலம் ஒரு தமிழ்ப்பெண்ணின் அன்றாட வாழ்க்கையினை அடையாளம் காட்டுகிறார். அழகான வார்த்தைகள் கோர்த்துக்காட்டியுள்ள இந்த கவிதை நம் மனதை அள்ளுவதில் வியப்பேதும் இல்லை என்பதால், கவிஞர் தினேஷ்க்கு நமது பாராட்டுக்களை பரிசளிப்போம். என்ன நாளை சந்திப்போமா?

ArunprashA சொன்னது…

வீதியிலும் நடக்கையிலே
விட்டில் பூச்சி வெளிச்சத்திலே
வீடு வந்து சேர்ந்திடுவா
Nice words.

மாணவன் சொன்னது…

கிராமத்து நிகழ்வுகளை வரிகளில் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

பகிர்வுக்கு நன்றி

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:))

Aathira mullai சொன்னது…

கிராமியப்பாட்டு மிகவும் அழகாக வ்ருகிறது உங்களுக்கு.. அருமை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yoov யோவ் நல்லாருக்குய்யா,கிராமத்து தெம்மாங்கு நல்லா வருதுய்யா

vanathy சொன்னது…

Wow! super.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு....
ரொம்ப புடிச்சிருக்கு.
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

சேற்றின் நறுமணம் வீசிய வார்த்தைகள்.

உங்களிடம் தமிழ் பணிகிறது ஒரு குழந்தையைக் குனிந்து தன் முதுகில் ஏற்றிக்கொள்ளும் யானை போல.

மன்னியுங்கள் தினேஷ் நான் இம்முறை கொஞ்சம் லேட்.

மோகன்ஜி சொன்னது…

தெம்மாங்கு இனிக்கிறது நெஞ்சில் ...

Meena சொன்னது…

எளிமையான வாழ்க்கையை கவியில் சிறை பிடித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

Right due to this write-up, I really believe that think that the site requirements alot more deliberation. I’ll in all likelihood be over again to educate yourself way more, thank you this knowledge.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி