செவ்வாய், 21 டிசம்பர், 2010

வானவில்லாக...!!



கல்லூரி பாதையிலே காற்றாக வந்தவளே
பச்சை பிள்ளையாய் நான் நிற்க
கொஞ்சும் கிளியாய் கொத்திச் சென்றாலே
கோவைபழமாக என் இதயத்தை

பேசும் கண்விழியில் பாடம் படித்தேனே
பள்ளிச் சிறுவனாய் அவள் பாசவிழிகளில்
ஊரைசுற்றி வரும் ஊதாரி நானன்று
உன்னை சுற்றி வரும் உசுரானேன்

காதலென்று நானுணரும் காலத்தே
காலாக மாறினாயோ - கரம்
பிடித்த அழைப்பிதழில் என்னை
அழையாமல் அழைத்தாயோ

கரையாத மனம் உன்னில்
கல்லாகி போனதுவோ - நீ வாழ்க
பல்லாண்டு வாழ்த்து சொல்லி
வருவேனே உந்தன் மணநாளில்
நானங்கு வானவில்லாக...!!

டிஸ்கி : கவிதை வரிகள் அனைத்தும் கற்பனையே யாரும் குழப்பமடைய வேண்டாம்

21 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

அருமையாயிருக்கிறது...

எங்கே நம்ம ஓடைப்பக்கம் காணல..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

Unknown சொன்னது…

//கவிதை வரிகள் அனைத்தும் கற்பனையே யாரும் குழப்பமடைய வேண்டாம் //

அப்பன் குதிருக்குள் இல்லை.

Unknown சொன்னது…

//கல்லூரி பாதையிலே
பேசும் கண்விழியில்
அவள் பாசவிழிகளில்
பாடம் படித்தேனே....//
தங்கள் பொன்னான பணி சிறக்க வாழ்த்துக்கள்.



டெம்பிளேட் உதவி: மாணவன்.

வைகை சொன்னது…

நேத்திக்கும் இன்னிக்கும் கவித ஒரு மார்க்கமா இருக்கு! பங்கு ம்ம்ம்வா?!!

வைகை சொன்னது…

பாரத்... பாரதி... said...
//கல்லூரி பாதையிலே
பேசும் கண்விழியில்
அவள் பாசவிழிகளில்
பாடம் படித்தேனே....//
தங்கள் பொன்னான பணி சிறக்க வாழ்த்துக்கள்.



டெம்பிளேட் உதவி: மாணவன்/////

இங்கயுமா?

சுசி சொன்னது…

நல்லாருக்குங்க.. வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

தம்பி உங்களுக்கு வார்த்தைகள் நன்றாக கைவரப் பெறுவதால், தயவு செய்து காதல் கவிதைகளை விட்டு வெளியே வாருங்கள், அப்புறம் எழுத்துப்பிழைகளால் அர்த்தம் மாறுகிறது அதனையும் கவனியுங்கள், நாம் எத்தனை கவிதை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை, ஒரு கவிதை எழுதினாலும் அதில் ஏதோ ஒரு சிறப்பு இருக்க வேண்டும்.

உங்கள் அடுத்த கவிதை தரமாக இருக்கும் என நம்புகிறேன்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..காதலென்று நானுணரும் காலத்தே
காணலாக மாறினாயோ - கரம்
பிடித்த அழைபிதழில் என்னை
அழையாமல் அழைத்தாயோ ..

அழகான வரிகள்...

karthikkumar சொன்னது…

:))

logu.. சொன்னது…

hayyoda..apdinga ipdillam?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

:))

வினோ சொன்னது…

என்ன தல... திசை மாறிய பயணமா?

செல்வா சொன்னது…

//பேசும் கண்விழியில் பாடம் படித்தேனே
பள்ளிச் சிறுவனாய் அவள் பாசவிழிகளில்
ஊரைசுற்றி வரும் ஊதாரி நானன்று
உன்னை சுற்றி வரும் உசுரானேன்
//

ஹி ஹி ஹி ... இது நல்லா இருக்கு அண்ணா ..!!

நிலாமதி சொன்னது…

கரையாத மனம் உன்னில் கல்லாகி போனதுவோ - நீ வாழ்க பல்லாண்டு வாழ்த்து சொல்லி வருவேனே உந்தன் மணநாளில்நானங்கு வானவில்லாக...!!


நீ வாழ்க பல்லாண்டு

சென்னை பித்தன் சொன்னது…

எங்கிருந்தாலும் வாழ்கவா?
நல்லாருக்கு!

Philosophy Prabhakaran சொன்னது…

// கவிதை வரிகள் அனைத்தும் கற்பனையே யாரும் குழப்பமடைய வேண்டாம் //

பொய்தானே... உங்கள் கவிதைகளை விட டிஸ்கிக்கள் அதிகம் ரசிக்க வைக்கின்றன....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு ,டிஸ்கில ஏன் குழப்பறீங்க>நக்கலு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்க கவிதைல எழுத்துப்பிழை,இலக்கணப்பிழைஎதுவும் இல்லை நல்ல முன்ன்னேற்றம்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாருக்கு

vanathy சொன்னது…

super!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

குளிரு வந்தாலும் வந்துச்சு, நம்ம தினேசு ஒரு மார்க்கமாத்தான் இருக்காப்புல்...!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி