சத்திய சோதனையூடே
சங்கடங்களைத் தாண்டி
சற்றே சிந்திக்கும் மனிதா
சலனம் துறப்பாயோ
சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்
சடுகுடு ஆட்டம் நம்மில்
சங்கடப்படும் உள்ளம்
காவியத் தமிழர் நாம் என்று
கன்னித் தமிழ் மேவிய
கவி பாடும் சொற்கள்
களவாடபட்டுவிட்டதா...?
டிஸ்கி ; கேட்க்க வேண்டும் என தோன்றியதால் கேட்டுவிட்டேன் உங்கள் தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ( அடப்பாவி என்னடா அரசியல் வாதியா மாரிட்டியானு கேக்காதிங்க நான் மாற மாட்டேன் )
24 கருத்துகள்:
தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் //
டிஸ்கில கூட கவிதை மாதிரி எழுதனுமா.
( அடப்பாவி என்னடா அரசியல் வாதியா மாரிட்டியானு கேக்காதிங்க நான் மாற மாட்டேன் ///
நான் கேட்பேன் பங்கு. என்ன பண்ணுவீங்க.
////சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்////
வார்த்தைகளுக்குள் இந்தளவு ஜாலமா அருமை சகோதரா...
பங்கு கேள்வியெல்லாம் சரிதான்! ஒரு பயபுள்ளயாவது பதில் சொல்லுதா?
ஓட்டும் போட்டாச்சு பங்கு!
கேள்வி கேட்பது தமிழன் குணம்...
பதில் சொல்ல மாட்டோம்
வார்த்தைகளுக்குள் இந்தளவு ஜாலமா அருமை சகோதரா.//
கமேண்டில் இவ்வளவு ஜாலமா சகோதரா
தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் //
என்னய்யா என்னுது தங்க கரமா ஹிஹி..
சரளமாய் தமிழ் பேச சஞ்சலப்படும் பால்யம்... நிறைய நிந்தனைகளைத் தூண்டுகிறது தினேஷ்!
சரியான கேள்வி தான்..... பதில் தெரியும் போது சொல்லுங்கள்.
கேள்வி நல்லா தான் இருக்கு... பதில் தான் கணனோம்...
களவாடபட்டுவிட்டதா...?
அருமை சகோதரா....
களவாடபட்டுவிட்டதா...? சரியான கேள்வி.....
அருமை!!!
அருமை!!!!
கெடச்சதா? இல்ல கெடைக்குமா?
அன்பு தினேஷ் வணக்கம். உங்களின் ஆதங்கம் தமிழ்ச் சமுதாயத்துக்கு முன் வைக்கப்படுகிற சாட்டையடிக் கேள்வி . தாய்மொழி தெரியாது எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரே சிறுமை புத்தி படைத்த இனம் நம் இனம். இங்கே புட்டிப் பாலுக்கு இருக்கும் மரியாதை தாய்ப்பாலுக்கு கிடையாது. எல்லாம் வெளி நாட்டு விதையில் முளைத்த செடிகள் போலும்.
//காவியத் தமிழர் நாம் என்று
கன்னித் தமிழ் மேவிய
கவி பாடும் சொற்கள்
களவாடபட்டுவிட்டதா...?
/
நல்லா இருக்கு அண்ணா ..!!
//சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்
சடுகுடு ஆட்டம் நம்மில்
சங்கடப்படும் உள்ளம் //
parattugal
நண்பரே, உங்கள் கவிதையின் கருப்பொருள் நன்றாயிருந்தது
பல சொற்கள் களவாட பட்டன தான்
ஆனால் தம்மையும் அறியாமல் தாங்களை போல பல தமிழ் ஆர்வலர்கள் கூட தமிழ் அல்லாத சொற்க்களை
பயன்படுத்துவது தான் வேதனையாக உள்ளது
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%௮
http://thooyatamizh.blogspot.com/
//சத்திய (சமஸ்கிருதம் ) சோதனையூடே
சங்கடங்களைத் (சமஸ்கிருதம் ) தாண்டி
சற்றே சிந்திக்கும் மனிதா
சலனம் துறப்பாயோ
சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்
சடுகுடு ஆட்டம் நம்மில்
சங்கடப்படும் (சமஸ்கிருதம் ) உள்ளம்
காவியத் (சமஸ்கிருதம் ) தமிழர் நாம் என்று
கன்னித் தமிழ் மேவிய
கவி பாடும் சொற்கள்
களவாடபட்டுவிட்டதா...?
//
நீங்கள் இனி மாற்று மொழி சொற்கள் நீக்கி எழுதுவீர்களா?
மற்றபடி தங்களின் தமிழ் ஆர்வம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது
ஆதிரை
கவிதை நன்கிருக்கிறது தினேஷ்குமார்!
இதற்கும் நூறாவது பதிவைக்கடந்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!
//தங்க கரங்களில் //
எங்கிட்ட வலது கரம், இடது கரம் மட்டுந்தானே இருக்கு தினேஷ்.
//எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்//
ஆள்காட்டி விரலுக்கு மை வெச்சி விடுவீங்களா?
என் கருத்தின்படி குறை சொலவதற்காக என்று நினைக்கவேண்டாம்.தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலைதான் நீங்கள் சொல்லியிருப்பது.ஈழத்தமிழர்களிடம் மிக மிகக் குறைவு.என்னிடம் மொழிக்கலப்பு இல்லையென்றே சொல்வேன்.களவாடப்படவில்லை தினேஸ்.களவு கொடுக்கிறோம் !
//சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்//
Absolutely true
கருத்துரையிடுக