செவ்வாய், 22 மே, 2018

வாங்கச் சாப்பிடலாம்

”வட்டத்தை வரைந்துவிட்டே வாழ்வைத் தந்தானே
விட்டத்தை விரைந்துகூட்ட ஆசைக் கொண்டோமே
சட்டத்தை அறுத்துகட்டிக் கோணம் செய்தோமே
கட்டத்துள் தனையடைத்துக் காலம் என்றோமே”

ஒரு வட்டத்தை வரைந்து வைத்து நமக்கான எல்லாவற்றையும் அந்த வட்டத்துக்குள் வைத்தே நமக்கான வாழ்க்கையைத் தொடங்கிக் கொடுத்தான் இறைவன்.

ஆனால் நாம் அதைச் செய்தோமா என்றால் இதுவரைக்கும் இல்லை எனபதே உறுதியான பதில் . செய்தார்கள் என்றாலும் உறுதியான பதில்  சித்தர்களும் ஞானிகளும் அடங்குவர் அப்படியிருக்க,

கடவுள் கொடுத்த வட்டத்தின் விட்டத்தை விரைவில் பெரிதாக்கவே எல்லாரும் முயன்றிருக்கோம் யாராலும் அந்த வட்டத்துக்குள் தன்னைத்தான் அடைத்துக் கொள்ள முடியவில்லை விரும்பவில்லை. இப்படிதாங்க நம்முடைய உணவுமுறை முதற்கொண்டு பல வழிமுறைகளை நாம் மாற்றி அமைத்ததாலே நோயும் பேயும் வந்தமர்ந்தது நம் வாழ்வில் உண்மையா என்று சிந்திந்து பாருங்கள்.

சிறுவயதில் நாம் உணவு உண்ணும் பொழுது நன்றாக யோசித்துப் பாருங்கள் அப்பா என்ன சொன்னாரென்று எனக்கு ஞாபகம் இருக்கு என்ன சாப்பிடும் பொழுதுப் பேச்சு வேண்டியிருக்கு “ வாயை மூடிக்கொண்டு சாப்பிடு ’’ என்று , அப்போ நாமென்ன நினைத்தோம் என்றால் வாயை மூடிக் கொண்டு எப்படிச் சாப்பிடுவதென்ற ஒரு கேளிப்புன்கையை மட்டுமே அவருக்குக் கொடுத்திருப்போம். அதை இப்போ யோசித்தால் தான் புரிகிறது அவர்கள் மேம்போக்காகச் சொன்னார்கள் நாம் விளையாட்டாக நினைத்து விட்டுவிட்டோம்.


யாருக்கும் தொப்பையோ உடம்போ அளவுக்கு அதிகமாக ஏற வேண்டிய அவசியமே இல்லை . அப்படி ஏறுதென்றால் நாம் அவசியத்தை மீறுகின்றோம் வட்டத்தின் விட்டத்தை அதிகப் படுத்த முயற்சித்தோம் என்பதே உண்மை . சரி வாங்கக் கதைக்கு வருவோம் பசி எடுக்கும் பொழுது மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் தாகம் எடுக்கும் பொழுது மட்டும் தண்ணீர் அருந்துங்கள் ஆனால் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் அரை மணி நேரத்தைத் தண்ணீர் அருந்த ஒதுக்கி வையுங்கள் இப்படிக் கடைப்பிடிச்சாலே உடம்பிலுள்ள பல நோய்கள் சொல்லாமல் கொல்லாமல் ஓடிவிடும் இருந்த இடம் தெரியாமல். 

நம் உடம்புக்குச் சரியான வைத்தியர் யாரென்று பார்த்தால் நம்ம ’நாக்கு’தானுங்க எப்படியென்று கேட்டால் அந்த அளவுக்கு எனக்கு விளக்கமளிக்கத் தெரியவில்லை என்றாலும் ஒரு சிறு உதாரணத்தைச் சொல்கிறேன் உணவில்லாதுச் சோர்ந்த நிலையில் அவசரத்துக்கு ஏதோ ஓர் உணவகத்தில் சாப்பிடுறோம் நல்ல சுவையான உணவகத்தையே தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகிறொம்னே வைத்துகொள்ளுங்கள் , கவனமாப் பாருங்க நல்ல சுவையான உணவைச் சாப்பிடுகிறோம் சுவையை மட்டுமே உணர்ந்து சாப்பிடுகிறோம் அச்சுவையை உணர்த்தியது நமது நாக்கு என்பதையும் உணர்ந்துகொள்கிறோம் . 

அப்படி அந்தத் தரமான உணவகத்தின் சுவை மிகுந்த உணவைச் சாப்பிட்ட நேரத்திற்கெல்லாம் நம் உடம்பில் ஒருசக்திப் பரவும் பாருங்க அதாங்க உடம்பிற்கு இப்பொழுதுதான் தெம்புக் கிடைத்ததுபோல் இருக்கும் . அதாவது சாப்பிட்ட உணவானது இன்னும் முழுவதுமாகச் செரிமானவில்லை ஆனால் உடலுக்குத் தேவையான தெம்பு கிடைத்துவிட்டது, அதெப்படிச் சுவையை மட்டுமே உணர்ந்தோம் ஆனால் உடலுக்குண்டான சக்திக் கிடைத்துவிட்டது. அப்போ அங்கு வேலைச் செய்த்தது நமது நாக்குச் சுவையையுணார்த்தி உடலிலுள்ள உறுப்புகளுக்குத் தேவையான தகவலைத் தந்திருக்கிறது ஆதலால் நமது உடல் உற்சாகத்தில் சக்தியைப் பெற்றது என்று வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 

நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதைக் கருத்தில் சொல்லுங்க மறக்காமல் 


இப்படி உணவகச் சாப்பாட்டால் சக்திப் பெற்ற உடல் அந்த உணவின் செரிமானத்திற்குப் பிறகு எப்படி இருக்கும் என்று பார்த்தால், நீங்களே சொல்லுவீர்கள் அதென்னடா அது சாப்பாடு நல்லாதான் சுவையாக இருந்தது ஆனால் உடம்பை ஏதோ பண்ணுகிறதே என்று புலம்புவதுண்டுச் சரிதானே . உண்மையும் அதாங்க அறுச்சுவையும் நமது உடலைப் பாதுகாக்கும் மாய எந்திரம் ஆகும். சுவைக்காக எதையெதையோ கூட்டிக்கழித்துச் செய்த உணவை உட்கொள்ளும் போதே நம் உடலானது பல சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை ஓரளவுக்குப் புரிகிறது .

உணவகச் சாப்பாட்டால் கொஞ்ச நேரத்துக்கு சக்திக் கூடும் பின்னர்க் குறையுது. அதையே வீட்டுச் சாப்பாட்டில் பார்த்தீர்களென்றால் தலைகீழாக நடக்கும் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டவுடன் சிறு மயக்கம் வரும் அதாங்க ’உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும்’ செரிமானத்திற்குப் பிறகே உடலுக்கு சக்திகிடைக்கும் நீங்களே உங்கள் அனுபவத்தில் தெரிந்துக் கொள்ளலாம் இதையெல்லாம் எது பொய் எது மெய்யென்று .

வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . 

மூன்றாம் பகுதிக்கு : உண்ணுவதெல்லாம் உணவல்ல

கலியுகம்: சரிங்க அதிக வேலைகள இருப்பதால் இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன் மீண்டும் சந்திப்போம். கலியுகம் தொடரும் ...

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து .

அருமை அருமை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி