புதன், 31 ஜூலை, 2013

4.பித்தனின் சமையல்


16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்
வல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்
கொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்
நின்றாடி என்று நிலைபாடும்....

17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை
விடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்
நினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்
நிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....

18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு 
காவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்
தேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்
ஆளுமை பாவித்த வீதிசென்றேன்....

19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில் 
அசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்
கருவே உருவாய் கருணை தருவாய்
கடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....

20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா
வேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா
பாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க
உள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது என்னவொரு இனிமை...! வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகான வரிகள்... என்ன 3 முறை படிச்சதான் முழுப்பொருளும் எனக்கு விளங்குது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் கவிதை... அப்பத்தான்ய்யா பொருள் விளங்குது... கோனார் நோட்ஸ் போடணும் போல....

அப்புறம் டெரர் கும்மி விருது முடிஞ்சு ரெண்டு வருசமாச்சு... தூக்கிவிடலாமுல்ல... முன்னாடி சிரிக்கிது....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி