திங்கள், 14 அக்டோபர், 2013

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....!


அற்றதிரு என்னில் அடைக்கலம் ஆகிநிற்க்கும்
உற்றதிரு உன்னில் அடக்கிடல் ஆகுமாயின்
வெற்றுத் திருவுடலின் வற்றல் தகுமாயின்
தாகம் புகும் தரணியையார் ஆள்வது

பற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ
நெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு எனை
அற்றதிரு ஆடவனாய் விற்றடக்கி வீருகொள்
கொற்றவளே கோலமிடு கோர்வையாய்

கோவை கடந்தறிய கொய்யா சுவையறிய
பாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்
பார்கடலான் பார்வையுனை ஆட்கொள்ள ஆகும்
அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....

புதன், 31 ஜூலை, 2013

4.பித்தனின் சமையல்


16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்
வல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்
கொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்
நின்றாடி என்று நிலைபாடும்....

17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை
விடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்
நினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்
நிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....

18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு 
காவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்
தேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்
ஆளுமை பாவித்த வீதிசென்றேன்....

19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில் 
அசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்
கருவே உருவாய் கருணை தருவாய்
கடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....

20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா
வேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா
பாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க
உள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...

ஞாயிறு, 14 ஜூலை, 2013

3.பித்தனின் சமையல்


11.சூதாட சூட்சுமம் வாதடி வந்தது
சூழலின் சூடும் சுடுமென் றறியாது
வாதத்தின் வாட்டம் உருமாறி உள்ளில்
கருவேரிட வேற்றுடல் தாண்டியும் காணேன்...

12.நில்லாது ஓடிடும் வெண்ணிலவின் பூரணம்
காண கடைக்கண் சிமிட்டி கருவிருள்
தாண்டி எனைத்தொட்டு தாலாட்டி செல்லமாய்
வின்னில் உலாவரும் உன்னதம் காணே...

13.என்னில் அறியாது எனை மீட்டும்
முருகா என்சொல் எடுப்பினும் அச்சொல்
அழகுடுத்தி ஆழ்ந்து வரும் துணையே
தமிழ்குமரா உன்னடி பனிந்தேன் பவணிவா...

14.மனக்கும் மருதமல்லி யேயுந்தன் சந்தமெனை
வாட்டுதடி மந்தம் பிடித்தலைய மாற்றுதினை
போற்றுதுனை மேற்க்கரையை கார்க்குவிய தேற்றும்
நரனல்லோ நான் எனக்கணிய யேதும்தா...

15.நானொரு குரல் பாவை நடனனின்
அருள் பாவை மழலையாய் அழும்
பாரேன் தகித்திடும் தாகம் தனியே
தினந்தோறும் ஓதும்வே தம்புதிதே...

திங்கள், 8 ஜூலை, 2013

2.பித்தனின் சமையல்


6.காட்டி மறைநின்றான் ஏட்டினில் கூறுவ
கேளும் கிடைக்கனலான் காட்டி நிறைச்செரியும்
கட்டுவன் கோட்டையுள் காணாது கிட்டுவன்
காட்டி உனைவடியும் பேராழி உள்ளேயுகம்..

7.முத்தெடுத்தான் முத்தெடுத்தான் மூழ்குதலை தத்தெடுத்தான்
தத்துவம்போல் கட்டிவைத்தான் கொட்டியவை தாம்தம்
அறிய தமக்குரிமை யாதெனவே குட்டுவைத்தான்
கொட்டியவன் தத்தெடுத்த பிள்ளையானை..

8.சத்திரத்து வீதியிலே சங்கமிக்கும் சூழலிலே
வாழியென வந்தால் மழைமுத்து மாரியெனை
வாரிஅணைத் துக்கொண்டால் தேரினில் வேந்தனைப்
போல்திகழ பாடல் பொழியேன் இன்று...

9.பட்டி யிலடைத்தான் பட்டான் படியமுதம்
புட்டி யிலடைத்து விட்டான் பிடியமுதம்
பக்தி யிலடைத்து தொட்டான் முழுஅமுதும்
புத்தி யிலடைத்தால் கிட்டும்...

10.அழகந்தி சிற்பம் அழகேந்தும் ஆலிலை
நீளா நிலையாகி மீண்டுவரும் நாளை
மிகையாகும் பார்வை தொடருந் துனிவு
படரப் பழிதங்கி பார்கடவும்...

திங்கள், 1 ஜூலை, 2013

1.பித்தனின் சமையல்


1.கனிந்ததோ காலை களைந்ததோ கண்டகனா
காணும் இடமெலாம் காட்சி பிழம்பாய்
ஆட்சி சொரூபனே நேரெதிர் சாட்சியாகி
நில்லானே சங்கடந் தீர்க்கும் மருந்தாய் ...

2.கந்தனை காணுமிடம் வெல்லும் தமிழமுதே
சிந்தனை நாணுமிடம் வெல்லும் கவியமுதே
வந்தனை செய்யுந் தொழிலே தந்தனை
போற்றி வழிபாடி வந்தேனே நான்...


3.உச்சி முடிகாண பட்சியான சிற்பன்
வடிதொழிலில் தைத்த வடு நதியாகி
நாணய மிச்சமிதி யாகி மதிசூட
மலர் ஆகிநின்ற பூதவுடலே சொல்கேளாய்...

4.அரிதிரி யென்றான் திரிய திரியாகி
தீரா சுடாராகி தீண்ட திருவாகி
தில்லை யுருவாகி திண்டாடி ஆடுறான்
நின்றுமின்று மீராது வாடுதே கன்று...

5.குழிசென்ற தன்கூடே வரியகுழி சென்றதெது
கூறே விரியுமவணி பொய்யுரை பூக்களே
பூத்ததோ புத்தகம் ஆதலின் ஆதலுடன்
வித்தகன் ஆக கடவது உன்மெய்...

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

எங்கும் நிறைந்தவன் எங்கும்.......!


பொய்யெனும் வில்லேந்தி மெய்யெனும் நாணேற்றி
மாசிலா அம்பெய்த போர்களத்தே போற்றுமின்
ஏற்றுமெனை தாழ்த்தும் தரமே நிரந்தரமே
யாசித்து ஆவாகித்த பூஞ்சுடர்....

 
அங்கென திங்களை சுட்டி நிலானென்
தங்கிடும் சூதனன் வெற்றிட தேரினில்
வட்டிட பாரினில் நிர்பந்த சூழலேன்
சொல்லிடை பூவாகி மெல்லென தீர்வாகி....


மாதவ கோடரி மான்விழ காடேரி
சாதக சூடேரி மீள்வதரி தீர்க்கதண்டம்
தீதில் பகுதியான் வேதர்க்கு வீதியன்
மாதர்க்கு மழலையான் சூதனன்....


ஊழிக் கணையானே ஆழிக் கடிவாளா
நாழி நிறுவோனே ஆதி முதலானே
அச்சு ததிருமானே உச்சு தலைகாணான்
மிச்சமென வடித்த உள்உணர்வடி வாகிநில்....


துரும்பினில் தூய அருளனைக் காண
அரும்பிய மாலை மதமெனும் காரிருள்
மாமதை தேரினில் உண்மை உருவற்று
காணாது எங்கும் மிதிபட்டு வீழினமானேன்....

வெள்ளி, 22 மார்ச், 2013

இனியேனும்....? இனிமை தாரும்....!


 நான் வேண்டும் வரம் தா ... ! இறைவா... !
வரம் முழுமைப்பெற வாக்கினிலே நீவா...!
நாவினில் சூடிய... ! உன்னால் நரனாக
எட்டுதிக்கும் என்இனம் படும் பாட்டினில்....?
கேள்வித் தீ மூட்டி... ! கேளாயோ ... ! உந்தன் உள்ளில்
மாறாதே ... ! வடுவங்கு நினைமாற்றி நீட்சிக்கொள்ள
ஆத்திரம் கொண்டு உந்தன் நா ... ! விரட்டும் வரம்தா ...!
நாதனாய் மயங்கி ஆடவிடு...! ஆடவிடு ....!

நாளையை எண்ணி ... ! என்னில் கோர்த்துவிடு  ....


கூட்டினுளும்..! காட்டினுளும் ...! கூட்டமாய் வீரர் ..!
வதையில் விதையாகி...!  செந்தமிழெனும் தீச்சுடராய்...!
வீரம் துளிர்விட ....! துரோகத்தீ ... ! அருகாமல்
தூரத்தே தூற்றி ஆழ்த்தும்...!  பிறைசூடா ... ! 

இனியவனாய் இனியேனும் இன்னாரில் தர்மம் 
காக்கும் செந்தமிழர் குலம் செழிக்க ...! ஆதரவு தாரும்
இனமக்களுக்கு இனியேனும்....?  இனிமை தாரும்....!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி