செவ்வாய், 19 மே, 2015

"கதம்பம்"

1.கண்ணனென் அன்பிற் கடியானே 
       கற்றுழப் பந்தப் படியாகேன் 
வண்ணம்முன் சந்தக் கொடியாகி 
       வந்தவன் சொல்லப் பிடியாவேன் 
எண்ணமென் சிந்தைச் சுழலாட 
       எண்ணுவன் விற்றப் பழமானான்
விண்ணவன் தொட்டுத் துதிபாட
       விந்தையின் சுத்தச் சுடரானான்

2.மேவத் தாகத் தனிவாகும் 
       மேளத் தாளத் துணையோடும் 
ஆவித் தாழத் தெளிவாக
       ஆரத் தூரத் துணிவாகும் 
பாவக் கோளக் கரமாகும் 
        பாரத் தானைத் தொழுதாளும்
சாவித் தேடித் திரியாது
        சாரத் தூதத் தயவாகு

3.காதலுரு வேதம் காணாவெண் மேகம் 
        காரூரும் மோகம் காணாய் 
பாதமிடும் வேடம் பாராளும் நேரம் 
        பாடாத ராகம் பாடாய் 
தூதனிடும் வேடம் தோதான தாகும்
        சீராளும் தேகம் சூடாய்
வாதமிரும் கூடும் மாறாது நாளும்
        வாதாடும் பேதம் மாறாய்



4.ஆட ஒருத்தி அலங்காரம் பொருத்தி 
கூட ஒருத்திக் குறிசொல்லும் குறத்தி 
பாட ஒருத்திப் பலகாரம் உணர்த்தி 
தேட விருத்தித் தெளிவாகும் படுத்தி

5.அரிதாரம் பூசி அரங்கேறி ஆட
பரிகாரம் உண்டா பகவானும் கூட
சரியானத் தோற்றம் சமமாகும் நாட
அரிதாக மாற்றம் அரணாகும் சூட

6.காணாக் கருவாகும் காணாப் பழமேநீ 
காணாப் பதமேறும் காணாய்த் துணிவேற 
காணோர்ப் பொழுதேனும் காயாய்த் தவமேனி 
தூணாய்த் தனியாகின் சேயாய்ப் பெருமானும்

7.நேரமும் தோரனை நீள நிகழ்வின் நிழலடுக்கும்
சாரம் கடத்தும் சகலமுன் கம்பீரத் தன்னெழிலும்
பாரம் குறைந்தப் பருவம்முன் பார்த்துப் பழகிடுதல்
காரணக் காரியக் கட்டட மாயக் கதிர்களிலே

8.தேடி ஓடிடும் தேவத் தூதனே 
தேட ஆடிடும் தேகத் துள்ளதே 
மாட மாளிகை மாயத் தூணதே 
நாடும் மானிடன் ஞானத் தீர்விதே

9.ஆடும் குறத்தி ஆட்டம் துறத்தி 
பாடும் குறித்தும் பாட்டும் விரட்டி 
தேடும் புறத்தில் தீட்டும் புரட்சி 
வாடும் மனத்தை மாட்டும் பொருத்தி

10.ஆலகாலம் உண்டுநீ அகிலமாண்டச் சங்கதி 
பாலனாகும் பந்தம்முன் பசித்திருக்கேன் சொல்லிடு 
ஆலங்காய்த் தக்கிளையி லாடுதந்த மோகமுள் 
நாளுங்காத்து நின்றதன் நாதமுந்தன் ஞாயமே

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


கதம்பக் கவி மணத்தது நண்பரே...

UmayalGayathri சொன்னது…

அருமை சகோ அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை...

Thoduvanam சொன்னது…

அருமை...

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி