திங்கள், 20 ஏப்ரல், 2015

"கர்மமெதோ கூற்றுமாகி"


1.கண்டதும்கொள் காரியமே மாயையாகும்
         காரணச்சொல் காணத் திறவும்
கொண்டதும்கொள் கர்மமெதோ கூற்றுமாகிக்
         குன்றமர்ந்து கொண்டே கொடுக்கும்
கொண்டவுருக் கண்டததே கோளமிரும்
         கோயிலெங்கும் கூத்தன் குடிலாய்
வண்ணமலர்த் தோட்டமெங்கும் வந்தமருந்
        தென்றலுடை மாற்ற மயங்கேன்


2. கொண்டவன் கொள்ளக் கொடுத்தே கொலுவிரும் கோளத்தில்
கொண்டையில் கொன்றையும் கூந்தலில் கங்கையும் சூலமுடன்
தொண்டையில் ஆலகாலம் தீண்டிடும் நாகப் பதமணியாய்
தொண்டனுன் தோற்றத்தைத் தீட்டிவிட்டான் தங்கிடும்நீ ஆட்கொள்ளே


3. கண்டவர் காணாக் கடவுவர் தானகமே 
கண்டவர் காணக் கயவரும் ஆனவரே
கண்டவர் காணுங் கடனுரு வானவரே
கண்டவர் ஞானக் கருபொரு ளானவரே

4.
கோபத்தீ மூட்டாதே கோணத்தை மாற்றாதே 
சாபத்தை ஏற்காதே சாரத்தைத் தூற்றாதே
தீபத்தைப் போலுந்தன் தேகத்தைக் கற்றாலே
தாபத்தீ விட்டோடும் தானென்றேத் தானாகும்

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஒவ்வொரு படத்துக்கும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// தீபத்தைப் போலுந்தன் தேகத்தைக் கற்றாலே //

சிறப்பான வரிகள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி