சனி, 4 ஏப்ரல், 2015

"நானெனை நாடி வந்து"

1.காதலே னென்னைக் கட்டிக் 
        காட்டினில் விட்டுச் செல்ல 
   பாதகம் இல்லை முள்ளில் 
        பாதையை மறந்து போனேன் 
  சாதனை யொன்று மல்ல 
        சாதலைக் கொன்றேன் போதும்
  பாதையில் செல்லுந் தூரம்
        பாலனைப் போலா னேனே

2.மழையினி லிறங்கி ஆட 
        மனதினில் தணியும் தாகம் 
  பிழைதனில் பயண மார்க்கம் 
         பிரிவது தருமோ யோகம் 
  உழைத்திடு முயர்வின் தாக்கம் 
         ஒழுங்கினை வளர்க்கும் யாகம்
  பழமையை புகட்ட வாழ்வு
         பழமென நழுவும் பாலில்



3.நானெனை நாடி வந்து
        நாதனை தேடிச் சென்றேன்
   தானெனக் கண்டு கொள்ளச்
        சாதன மேது மில்லை
   கானகம் செல்லப் போரேன்
        காரணம் கொல்லப் போரேன்
   ஆனவை யெல்லாம் என்னில்
        ஆனவம் கொன்றால் கூடும்

4.காற்றினில் பரவும் தூசி 
        கானலின் விபரம் நேசி 
   நாற்றுநன் உயர்வை பேசி 
        நாட்டினில் விளைய யோசி 
   சேற்றினில் உழவர் ஆட்சி 
        சேர்ந்ததுன் பசிக்கு காட்சி
   ஊற்றெலாம் முழங்கிப் போனால்
        ஓடுவர் ஒதுங்கித் தானே

4 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

நலம் தானே தம்பி ! அழகான கவிதை... நாள்பல ஆச்சு. வீட்டில் அனைவரும் நலமா ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... ரசித்தேன்...

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதை அழகு!

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி