தமிழே ...! அடியவன் பாடிட அமுதென வாராய்...!
தமிழே ...! அடியவன் பாடிட அரியவன்
ஆடிட அழையாய் அணியே நதியாய்
புறல புயாலய் அகல திகழவனை
தீண்டிட வாராய் மெய்யமுதம் தாராய்.....
ஈடேது சொல்லேன் நவமணி நாயகன்
திருவடி போற்றி திகழும் மனமடையும்
ஆனந்த கூடெந்தன் கூரே குயவனின்
கூட்டிசைக்கு பாட்டிசைக்கும் பாரேன்....
காடு விடுமென்னை காணேன் கனவே
கரிய நிறமேறி மாளாய் மதம்கொண்டு
விண்ணெட்ட மண்தட்டும் வீனனிச்சிறி யோனின்
மதியெட்ட மாதவனே நீவா....
சிலிர்த்தெழ சீர்படை தீட்டி யுகம்ஒத்த
யோகநிலை வீரா மதியேந்த மாறா
மனமுவந்து வாராய் கெதிகிட்டா பாவியுந்தன்
பாதமதில் வீழ நிலையாழ்ந்து தீரும்....
ஊட்டிக் களிப்பாள் தவழுமெனை தேவி
சீராட்டி தாலாட்டி நல்வினைதனில் தேற்றியே
அள்ளிமுகர் வாள்அகம் கிள்ளி இழுக்கினை
களைவாள் இளமதியென் தாயே.........
5 கருத்துகள்:
தமிழே ...! அடியவன் பாடிட அரியவன்
ஆடிட //
மானாட மயிலாட, தாத்தாவும் சேர்ந்தாட அதை பார்த்து நானாட, இதுதானய்யா உலகம் "ங்கே..." ஹா ஹா ஹா ஹா...
அமுதாய் சொல்லெடுத்து
குமுத மலர் வாசம் வீசும்
அழகிய பாமாலை
எம் தமிழன்னைக்கு....
சிறப்பு...
வாழ்த்துக்கள்...
தமிழ் வகுப்பினுள் நுழைந்தது போலுள்ளது.
அருமை...
வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக