வெள்ளி, 1 மார்ச், 2013

அருந்தவம் செய்யினும் காணா...!


சித்தனாகி போயின் புலப்படும் வெற்று
பிதற்றங்கு பித்தனாகி நானே பிழையேன்
முழுதுமெனை குற்றமாக்கி தீண்டா சாரமதை
சுத்தமாக்கி தாயென நில்லும் உலகு


மாதவம் சூடிநின்னை காண முதலென்ன
தாராய் பிறைமதி சூடா மனதினில்
வாடா மலராய் துளிரும் அனைப்பு
அருந்தவம் செய்யினும் காணா...............


நாறமலர் தேடினின்னை சூட்டுவிக்க வந்தவிழும்
சொந்தமதி முந்துமிடம் சிந்து நடனமாட
கார்வலுவன் நேரெதிரே கண்ணமிடை சிந்துமிதழ்
தேனமுத வண்ணக்கோலம் பாட.......
 


மெய்யுருகும் மேட்டில் கல்லுருகா காட்டில்
கரிய நிறவேடா கர்மமெதிர் தீர்க்கும்
கடுந்தவனே கூடும் கருணை வழித்தேராய்
கண்ணதிர கூறும் கடமையுந்தன் பாடே............


கொண்டனவே அஞ்சும் அகழியில் கொஞ்சி
விளையாடிடும் தங்கமுந்தன் சேயாம் சகடும்
அகன்றிட ஆற்றிடை நாதிகன் தேற்றிடும்
கூடு குவியலாய் மாயமெய் தானே............


பட்டத்து யானையும் கொட்டத்தில் கூடுமோ
சட்டத்து சாட்டையும் விட்டத்தில் தூங்குமோ
இட்டத்தென் தூவள் இயக்க மதிமாறியே
சுட்டதன் சூடு பிடித்தான் முடிவு..............


  

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பட்டத்து யானையும் கொட்டத்தில் கூடுமோ...
சட்டத்து சாட்டையும் விட்டத்தில் தூங்குமோ...

அருமை வரிகள் பல...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கொண்டனவே அஞ்சும் அகழியில் கொஞ்சி
விளையாடிடும் தங்கமுந்தன் சேயாம் சகடும்
அகன்றிட ஆற்றிடை நாதிகன் தேற்றிடும்
கூடு குவியலாய் மாயமெய் தானே...

அருமையா இருக்கு.... கொஞ்சம் புரியிறதுதான் சிரமமா இருக்கு...

நல்ல கவிதை.

மகேந்திரன் சொன்னது…

பித்தா...பிறைசூடி
என்று தொடக்கி...
அரியவாம் பல
தெரியாமல் போகுமோ என
முடித்த கவிதை மிகவும் அழகு நண்பரே...

சென்னை பித்தன் சொன்னது…

இதையெல்லாம் வியந்து பார்ப்பது மட்டுமே எனக்குச் சாத்தியம்!மிக நன்று

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி