நின்னை நினைத்துவிடின் என்னில்
நியாங்கள் முளைத்துவிடும் உள்ளில்
உனதுரு வளர்க்க மனக் கோட்டையில்
கருவரை யமைத்தேன்
மல்லிகை சரம் தொடுக்க வாசம்
உள்ளில் உணர்வதாரோ கல்லில்
காட்சி தந்து கலையாய் ஆட்சி
செய்ய ஆட்கொள்வாய்
சொல்லில் உதிர்ப்பதெல்லாம் உலகை
நொடிதனில் கடப்பதென்ன மெல்லிய
மனம் படைத்து குணத்துடன் கூட்டி
நிறை யளந்தாய் எங்கும்
சரீர குறிப்பறிந்து சார்ந்தவை
சகிதமென அருகினிலமைக்க அங்கு
தேர்ந்தவை அடைத்துவிட ஆறடி
நிலம் கொடுத்தாய் அதனிலும்..........
அவதியப்பா எங்கும் அமைதியின்
சூழலில்லை சூத்திரம் வகுத்தமைத்து
இன்னோர்க்கு சொத்து இருக்கையில்
ஏதுமில்லையென உணர்த்து
உனதுரு வளர்க்க மனக் கோட்டையில்
கருவரை யமைத்தேன்
மல்லிகை சரம் தொடுக்க வாசம்
உள்ளில் உணர்வதாரோ கல்லில்
காட்சி தந்து கலையாய் ஆட்சி
செய்ய ஆட்கொள்வாய்
சொல்லில் உதிர்ப்பதெல்லாம் உலகை
நொடிதனில் கடப்பதென்ன மெல்லிய
மனம் படைத்து குணத்துடன் கூட்டி
நிறை யளந்தாய் எங்கும்
சரீர குறிப்பறிந்து சார்ந்தவை
சகிதமென அருகினிலமைக்க அங்கு
தேர்ந்தவை அடைத்துவிட ஆறடி
நிலம் கொடுத்தாய் அதனிலும்..........
அவதியப்பா எங்கும் அமைதியின்
சூழலில்லை சூத்திரம் வகுத்தமைத்து
இன்னோர்க்கு சொத்து இருக்கையில்
ஏதுமில்லையென உணர்த்து
5 கருத்துகள்:
அருமை... அழகான கவிதை.
வாழ்த்துக்கள் தினேஷ்.
இருக்கையில் சொத்து ஏதுமில்லையென உணர்ந்தாலே போதுமே... வீண் சண்டை சச்சரவுகள் நீர்த்துப்போகுமே. அழகான வார்த்தைகளால் அரிய கருத்துச் சொன்னீர். பாராட்டுகள்.
மிக அருமை தினேஷ்.
அருமை ! வாழ்த்துக்கள் !
கவிதை நல்லாயிருந்தது... வாழ்த்துக்கள் தினேஷ்...
கருத்துரையிடுக