திங்கள், 27 பிப்ரவரி, 2012

நாளும் வாழ்வான்..................!

அற்றதும் தொடர்ந்துன்னில் ஆற்றா 
கடமைகள் புதையுண்ட நிலை காண
உற்றதன் துணைக் கொண்டு புதையல்
தேடப் பயணத்தை துவக்கு

புறம் காணா மறைத்து வைக்க
அகக்கோலின் அடியளந்து ஆழ்ந்துழ 
எட்டாப் படியும் கிட்டாக் கனியும்
அருகே அவணியில் காண்

சுடச் சுட சூடும் தணியும்
தனியாத் தாகம் தஞ்சம் புக
எஞ்சும் ஏகாந்த நிலையில் நீரூற்று
அணுகிப் பருகா இன்பம்

இவைதானோ இலைத் தழைக்கூடு 
இன்னோர் பிறவியெடுப்பினும் இயல்
சாடுவன நிவர்த்திசெய் இன்னலாயினும்
நல்லெண்ணம் கொண்டான் .....

நாளும் வாழ்வான்..................!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

நீ வருவாய் என...!


ஆழ்ந்த உறக்கம் இரவின் உச்சத்திலே
மெல்ல மெல்லிய கரம் பிடித்து 
என்னை அவளருகே அழைத்து செல்ல
உள்ளில் உணரா தவிப்பு 

மழலையாய் கூடே ஒன்றும் புரியாமல்
பற்றிய கரத்தின் பிடியில் பயணிக்க
சொல்லாமல் உணர்த்தி என்னை விட்டு 
செல்ல பிரமிப்பின் உச்சத்திலே

உனக்காக காத்திருக்கோம் வா வா
எங்கள் கண்ணே உயிரில் கலந்து
உள்ளில் உணர்வாய் என்னில் உணர்த்தி 
உருவளர்க்கும் செல்லமே ......

நீ வருவாய் என விழித்திருக்கும்
இரு விழிகளின் தாண்டவ தகிப்பு
நீளும் பாதைகளில் இனி மூவராய்
பயணத்தை துவக்க வாராய் ....

எங்கள் செல்வமே நீ வாராய்....!

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஏதுமில்லையெனில் ...!


நின்னை நினைத்துவிடின் என்னில்
நியாங்கள் முளைத்துவிடும் உள்ளில்
உனதுரு வளர்க்க மனக் கோட்டையில்
கருவரை யமைத்தேன்

மல்லிகை சரம் தொடுக்க வாசம்
உள்ளில் உணர்வதாரோ கல்லில்
காட்சி தந்து கலையாய் ஆட்சி
செய்ய ஆட்கொள்வாய்

சொல்லில் உதிர்ப்பதெல்லாம் உலகை
நொடிதனில் கடப்பதென்ன மெல்லிய
மனம் படைத்து குணத்துடன் கூட்டி
நிறை யளந்தாய் எங்கும்

சரீர குறிப்பறிந்து சார்ந்தவை
சகிதமென அருகினிலமைக்க அங்கு
தேர்ந்தவை அடைத்துவிட ஆறடி
நிலம் கொடுத்தாய் அதனிலும்..........

அவதியப்பா எங்கும் அமைதியின்
சூழலில்லை சூத்திரம் வகுத்தமைத்து
இன்னோர்க்கு சொத்து இருக்கையில்
ஏதுமில்லையென உணர்த்து

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கிறுக்கனின் கிறுக்கல்




சின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல்
மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர்
செல்லும் இடமெல்லாம் சொல்லும் 
வார்த்தை வெல்லப் பிறந்தேன்


புற்களைத் தொட்டுத்தவழும் அதிகாலைப்
பனித்துளி சொல்லும் சேதிக் கேளேன்
கண்மணி விடியல் நம்மை பிரிக்க
உன்னில் ஈரமாய் உறைவேன்


பாதம் பதியச் சிதறும் மண்துகள்
வின்னவன் உதிர்க்கும் மழைத்தூரலில்
மனம் மயங்கி பின்னிப் பினைந்து 
உள்ளில் ஈர்க்கும் உவமை


உள்ளவன் கண்டதும் கொண்டதும் 
மன்னவன் சூட மலர்மனமேந்தும்
இன்னலின் காரணி இனிமையாய் 
இதழருந்தும் மருந்தே 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி