இடையிடையே மெல்லும் வார்த்தைகள்
தவறுதென் வழிகளிலே தடையுடைய
தவமெதற்க்கு ஆயுத்தப்படுத்து அகமுள்ள
அறியதோர் உந்தன் கூர்வாளை
தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள்
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே
தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு
இன்னும் புதைக்கிறாய் ஏனோ வதைகிறாய்
ஆழ்வதும் தாழ்வதும் தானே உந்தன்
தனித்துவமென்றால் யார் உனைத்தாங்க
பாரினில் வேந்தனாய் பயணப்படு ...!
8 கருத்துகள்:
தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு
....... அருமையாக எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்!
அழகிய வரிகள்
இன்று மாணவர்களுக்காக பதிவில் ..
"தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள்
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே"
நீங்களே விருட்சமான பின் நிழல் எதற்கு ?
ரொம்ப அருமையான வரிகள் .வாழ்த்துக்கள்
தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு.
நல்லதொரு கவிதை தோழர் வாழ்த்துகள்..
எல்லா வரிகளும் நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !
தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் அற்புத வரிகள். பாராட்டுகள்.
ஆழ்வதும் தாழ்வதுமா? - ஆள்வதும் தாழ்வதுமா? எது சரி?
//அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு //
கோனார் துணையின்றிப் புரிந்துகொண்டேன்!
நன்று.
ஐயா புலவரே
நல்லா இருக்குயா நல்லாவே இருக்கு உமது கவி புலமை
கருத்துரையிடுக