தொடர் பதிவின் தொடர்ச்சி.........
முந்தைய பதிவை பார்க்க
இங்கே சொடுக்கவும்
6, படம் : சிந்து பைரவி
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல
தவறை தட்டிகேட்பாங்க பாருங்க
"பழகின பாஷையில படிப்பது பாவமில்ல"
"சேரிக்கும் சேரவேனும் அதுக்கொரு பாட்டப்படி"
5, படம் வாத்தியார் வீட்டு பிள்ளை
படத்துல நம்ம தலைவர் சத்தியராஜ் பாடுவாருங்கோ
அண்ணன விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்கள கட்டி ஒரு ஊர்கோலமா
சிந்தையில் வைத்த அண்ணனும் தான்
பந்தலில் நிற்க்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா
சத்தியராஜ் படத்துல தங்கை பாசத்தில் கண் கலங்கி பாடுவார்
பார்க்கும்போது நம்ம கண்ணும் கலங்கிரும். இதுக்கு மேல முடியல சகோ கொஞ்சம் கண்ணு கலங்குது எனக்கு
4, படம் : திருவிளையாடல்
"பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்"
தென்றலை வர்ணித்து பாடியிருப்பார் தென்றலோடு பயனிக்கற மாதிரி ஒரு அனுபவம் உண்டாகும் கேட்டுப்பாருங்க
3, படம் : கற்பகம்
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
என்ன அருமையான தாலாட்டு தூங்காம கேளுங்க அவ்வளவு அருமையா இனிக்கும்
2, படம் : மரகதம்
பாடியவர் : சந்திரபாபு , ஜமுனா ராணி
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே..........
என்னை நடனமாட களமிறக்கிய சந்திரபாபு பாடல்கள் என்னை இன்னும் சில பழமைவாதிகள் சந்திரபாபு என்றே அழைப்பர்
1,படம் : பாக்கியலட்சுமி
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார்
தோழி (மாலை)
கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் எதிர் காலம் (மாலை)
மறக்க முடியாத பாடல் என்ன இன்னும் மயக்கம் தெளியவில்லையா சரி அடுத்து யார் யாரெல்லாம் சிக்கராங்கன்னு பார்ப்போம
வாங்க வினோ , தமிழ்காதலன் அடுத்ததா பன்னிகுட்டி ராமசாமி (அதாங்க நம்ம கவுண்டரு) சி.பி.செந்தில்குமார் சாருக்கு படம் பார்த்து விமர்சனம் செய்ய நேரம் இல்லாத காரணத்தால் அவரும் தொடரவேண்டும் என்ற என் ஆழ்ந்த கருத்தினை உங்கள் முன் வைக்கிறேன் ஹலோ எங்க போறீங்க இன்னும் முடியல அடுத்ததா களம் இறங்குபவர்கள் நம்ம நாகராஜசோழன் MA (அதாங்க கோல்ட் பிரேம்) அடுத்து கருத்து கந்த சாமி நம்ம பிலாசபி பிரபாகரன் என்ன மக்கா சந்தோஷம் தானே
பி.கு. யாரவது தப்பிக்கனும்னு நினைக்க கூடாது இது அன்பு கட்டளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கவிதை மூலம் வதம் செய்ய படுவர்