செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மலரிதழ் மனம் எங்கே ...?

நரனின் பாதகை நவிலும் நடை
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்

தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ

மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்.... 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கீரிய காரிய மறியேன் ....!

சத்திரமோ சிறகணிச் சித்திரமோ
சாந்தமணி சன்னதியில் நாதனின்
சிந்தனைச் சிந்திய காவியமோ கல்லொன்றில்
சீவிய சிற்பமணிக் கூடோ

கருவிழி தொடர நிறந்தனில் விருட்சம்
கானக சுடராய் நாற்ற மத்தியில்
கிருதய பயனாய் நடந்தொரு கூடாய்
கீரிய காரிய மறியேன்



நதியாய் நாணலாய் விண் மதியாய் 
நாளுயர நாவறண்ட நரனாகி
நிறைத் தவழ நினைத் தொழும்
நீரண்ட நீதியின் வடு ......

கவரும் கலையின் கருவே கனலாய்
கானலின் காதலாய் காவலின் காகிதமே
கிளையின் கிடப்பினில் கிளியாய் கிறங்க
கீழலைக் கீதம் மறவே....



அங்கிலா எண்ணம் உடைத்து கண்ணிலா
காரியக் குடுவை மாறிய மடையுடைய
தேடியவன் சாடி வருவ சூடு
மலரிடத்து மனம் தவழும்Edit

வியாழன், 1 செப்டம்பர், 2011

வினைத் தீர்க்கும் நாயகனே...!


வந்தனம் வந்தனம் சாமியோ
வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

அவல் பொறி கடலை படையலும்
பிடிகொழுக்கட்டை அரைப்படி சுண்டலும் 
ஆணைமுகன் உன்னை வணங்கியே
விளைக்கதிர் தானியப் படையலும்


சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்
வினைத் தீர்க்கும் நாயகனாய் ... 


அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் சாமியே .....!

புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்றிலொடியும் நிழலே ...!


அன்றிலொடியும் நிழலே நின்றிலா
மனமே நிகழு நிலவினில் நீந்தும்
நினைவினி லாளும் சித்திரமே சட்டென
சுட்ட சங்கடச் சூழ்.....
விட்ட மதியில் கூர்விழிப் பதிய
அங்கமதி சங்கமத்தில் சூழ்வதெல்லாம்
நாற்கடந் தூற்றே நடை பழகி
தவழும் இதனச் சூடு
மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே
மகிழ்ந்தெழுவட்டில் மிகனுடை மலையே
கரணம் எரிச்சூடி தருனம் விருந்தாகி
அருந்தும் அவைச் சாடிய மருந்தென
தட்டிய மதுவினயக்கம்.....

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

யாரறிவார் ...?


கண்ணே என் கண்மணியே
மழலைப் பேசும் பைங்கிளியே
என்று வருவாய் உந்தன்
தாய் தந்தையின் முகம்காண
இப்பூவுலகில் உந்தன் வரவுக்காக
நாமிருவராக உள்ளோம்
என்று மூவராவோம் சொல்வாயோ
எந்தன் பச்சிளம் கண்றே

ஊரார் பேசக் கண்டேன்
ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - என
யாரறிவார் அவர் தம் பிறப்பை
தாய்மையின் கருவறையில்
உதிக்கும் ஒவ்வொரு
மழலையும் பெண்ணாகவே
முதல் உரு எடுக்குமென்று
யாரறிவார் ஆணும் பெண்தான்
நமை ஆள்பவனும் பெண்தான்....

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அந்தரத்தோணியில்.....!


காணா கருவிழியானோ தானே நகலுருவோனோ
சாரம் சலங்கையின் சகனெனும் நகமரியோனே
தாகத் தரணியில் வேகத் தடையெனும்
நாத நடனுருவே சரணம்..

சுயமெனுமுகமெரி சுகமெனுமுகமறி
பிறவணி சூடும் மகத்துவ மாலை
சரீரக் கூடு சமைத்துடன் கோரு
சகதிகளற்ற சாதகமாகு..

சங்கதிக்கேளேன் சரீரமானேன்
சகலமும் இழக்க சடலமுமானேன்
அகிலமும் விரட்ட அந்தரத்தோணியில்
நர்தனமாடிய நான் யார் .....?

புதன், 17 ஆகஸ்ட், 2011

விளையாடலாம் வாங்க.....


வட்டமிட்டு கொட்டு கொட்டி கூடி
விளையடிய காலம் எங்கே கண்
முன்னே நிழலாடுதிங்கே தனித்த
பறவையாய் தகித்த உள்ளங்கள்
கணினி கூடுக்குள்ளே முகமறியா
நட்புக்கள் வட்டம் சூழ கருவாகி
உருவாகி உயிர் பெற்று இன்று
உலகத் தமிழர் முன்னே
தவழுதிங்கே தங்கள் மதியை
தட்டி தரம்பார்க்கும் தங்கமெனில்
தகுந்த தன்னடக்க வெகுமதியளிக்கும் .......

புதிர் போட்டித் தளம் உருவாக பாடுபட்ட அனைத்து டெரர்களுக்கும் இனிய வணக்கத்துடன் கூடிய நல்வாழ்த்துக்கள் ......

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி