புதன், 16 மே, 2018

ஆகாரம் தேடி வாங்க ஆயுசு அதிகம் தேங்க

சரி வலிக் குறைந்ததா என்றால் அதுவும் இல்லை எடையாவது குறைந்ததே கொஞ்சம் என்றால். 

பின்னக் குறையாம என்னப்பண்ணும் ”விரும்பிச் சுவைக்காத உணவு” என்ன பயன் தரும் என்று நீங்களே சொல்லுங்களேன் .

உணவின் சுவையையும் சுவையில்லாது விருப்பத்திற்கு மாறாக உண்பதையும் உணர்த்திய நாட்கள். பதினைந்து இருபது நாட்களில் உடல் எடை என்னவோ நான்கிலிருந்து ஆறு கிலோ வீதம் குறைந்திருந்ததே தவிர, குதிகால் வலிப் போன பாடில்லை அதே வலித் தொடர்ந்து என்னை நடக்க விடாமல் துன்புறுத்திக் கொண்டிருந்தது . அந்தச் சமயம் அண்ணன் முறையாக வேண்டும் பள்ளிப் பருவ நண்பருமானவர் நெல்லிக்குப்பத்தில் புகைப்பட நிலையம் வைத்துள்ளார் அவர் பொழுதுப் போகவில்லை என்றால் அவருடன் சென்று உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம் ஊரில் இருக்கும் பொழுது.

அவருடன் இந்தக் குதிகால் வலியைப் பற்றியும் தற்சமயம் உண்ணும் உணவு முறையைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருக்கையில் . தம்பி பத்து ஒளிஒலி வட்டத்தகடு தருகிறேன் நேரம் ஒதுக்கிப் பார். குறைந்தது தொடர்ச்சியாகப் பார்த்தாலே ஐந்து நாட்கள் ஆகும் நீ விடுமுறையில் தானே இருக்கிறாய்ப் பார்த்துவிட்டுச் சொல் உனது உடலுக்கான வைத்தியம் உள்ளே உள்ளதென்றார். என்னடா இது மாயம் மந்திரம் எதாவது இருக்குமா மந்திரித்துச் செய்த ஒளிஒலி வட்டதகடோ என்று கற்பனையெல்லாம் ஒரு பக்கம் சென்றது . ஆனால் அவர் பெரும் நம்பிக்கையோடு என்னோடு தந்தார் இதனை நகல் எடுத்துக்கொண்டு திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற உத்திரவாதத்துடன் நானும் வாங்கிச் சென்றேன் . 

முதல் வேலையாக வீட்டிற்குச் சென்று மடிக் கணினியில் பத்து வட்டத்தகடையும் நகல் எடுக்க ஆரம்பித்தேன். இரவு உணவுக்குப் பின் முதல் தடைக் காண ஆரம்பித்தேன் , முதல் முறையாகத் தான் அவரைக் காண்கிறேன் ஆமாம் திரு. ’ஹீலர் பாசுகர்’ அவர்கள் தான் தொடங்கியதில் இருந்தே பேசிக் கொண்டே தான் இருந்தார் இப்போ முடியுமோ எப்போ முடியும் என்பதையும் பார்க்கப் பார்க்க மணி மூன்றாகி விட்டது. சரி தூங்கலாமென்று தூங்கி விட்டேன் மறு நாள் காலையில் எழுந்துக் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தேன். அம்மா எத்தனை முட்டைப்பா வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் சொல் சாப்பாட்டுக்கு முன்னால் எடுக்க வேண்டிய குளிகைகளை எடுத்துக் கொள் என்றார். 


குளிகைகள் இனி எனக்குத் தேவையில்லை முட்டையும் வேண்டாம் கோழியும் வேண்டாம் ஆவிப் பறக்க இட்லிச் சுட்டுக் கட்டிச் சட்ணியும் சாம்பாரும் செய்துக் கொண்டு வாம்மா நான் சாப்பிடப் போறேன் என்றேன் . அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு வைத்தியம் பார்த்தால் ஒழுங்காகப் பார் அரைகுறையாகப் பார்க்காதே செய்யாதே என்றார்கள் . எனக்கு ஒன்றும் இல்லை எல்லாம் ஓடிப் போச்சும்மா ஓடிப் போயிடும் துரத்திவிடுவேன் நெடுந்தொலைவுக்கு நோய்களை என்றேன் . வாய்க்கு ருசியா இப்போ செய்துத் தரப் போறீங்களா நான் வெளியேக் கிளம்பவா என்றேன் உன்னோடு போட்டிப் போட முடியாது எதாவது செய் என்று இட்லியும் காரச் சட்னியுமாய் வந்தார்கள் . 




குளிகைகள் இனி எனக்குத் தேவையில்லை முட்டையும் வேண்டாம் கோழியும் வேண்டாம் ஆவிப் பறக்க இட்லிச் சுட்டுக் கட்டிச் சட்ணியும் சாம்பாரும் செய்து கொண்டு வாம்மா நான் சாப்பிடப் போறேன் என்றேன் . அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு வைத்தியம் பார்த்தால் ஒழுங்காகப் பார் அரைகுறையாகப் பார்க்காதே செய்யாதே என்றார்கள் . எனக்கு ஒன்றும் இல்லை எல்லாம் ஓடிப் போச்சும்மா ஓடிப் போயிடும் துரத்திவிடுவேன் நெடுந்தொலைவுக்கு நோய்களை என்றேன் . வாய்க்கு ருசியா இப்போ செய்து தரப் போறீங்களா நான் வெளியே கிளம்பவா என்றேன் உன்னோடு போட்டிப் போட முடியாது எதாவது செய் என்று இட்லியும் காரச் சட்னியுமாய் வந்தார்கள் .

அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தண்ணீர்க் குடித்து விட்டேன் நேரம் துவங்கியதைக் கணக்கில் வைத்துக் கொண்டேன் . அவர் இட்லிக் கொண்டு வர முன்னப் பின்ன அரை மணிக்கு மேல் ஆகியிருந்தது . இட்லியைப் பார்த்ததும் அவ்வளவு ஆவல் காணததைக் கண்டவன் போலக் கண்டேன் இட்லியைச் சட்னித் தொட்டு மெல்ல சுவைக்க ஆரம்பித்தேன் அவசரப் படவில்லை நிதானமாக 

உமிழ்நீர் சுரந்து உணவோடு கலக்க 
உதடுப் பிரிக்காமல் உண்ண ஆரம்பித்தேன்  

நாவிற்குச் சுவையுணர்த்திப் பற்களால் மென்று மென்று 
கூழாக்கிக் கூழாக்கி உணவையனுப்பினேன்  உடலினுள்ளே 

நான்கு இட்லிகள் சாப்பிட அரைமணி நேரம் ஆகியது அந்தக் கடைசி வாய்ச் சாப்பிடும் போதே வயிற்றினுள்ளிருந்து சிறு ஏப்பம் எனக்குத் தேவையான உணவு கிடைத்து விட்டது இனி ஏதும் வேண்டாம் நான் கேட்கும் பொழுது எது கேட்கிறேனோ அதை மட்டும் கொடு என்று வயிறு பேசியதுப் போல் ஓர் உணர்வு என்னை மெல்லத் தீண்டிச் சென்றது . ஏங்க நாலு இட்லியை இன்னுமா சாப்பிடுறீங்க என்று சக்தி கேட்டுக் கொண்டே அகத்தியன் அச்சுதனை தோட்டத்தில் இருந்து உள்ளே அழைத்து வந்தாள். அம்மாவும் இன்னுமாடா சாப்பிடுற அட என்ன நாலு இட்லிதான் சாப்பிட்டிருக்க என்று அவர் முறைக்கு அவரும் பேசிக் கொண்டிருந்தார்.

“ அவர்களுக்கென்னத் தெரியும் நான் அமிர்தம் உண்ண ஆரம்பித்து விட்டேனென்று “ 

முதல் பகுதிக்கு : வாங்கச் சுவைத்து உண்ணலாம் 

கலியுகம் : கல்யாணச் சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் அகா அகா அகா. தொடர்ந்து வாசிங்க உடலைக் காப்பதைப் பற்றிப் பார்க்கலாம் என்னப்பா நீ வைத்தியனா அவருச் சொன்னதைச் சொல்லப் போற அவ்வளவுதானேன்னு நீங்க கேட்பது எனக்கும் கேட்கிறது. என்னதான் அவர் சொன்னது நான் பார்த்த வட்டத்தகடுப் பத்தில் ஒன்று மட்டும் தான் இன்று வரை மீதி ஒன்பது தகடுகளின் நகல் அப்படியே தான் கணினியுள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மனதிற்குச் சரியான தீர்வை முதல் தகட்டின் முதல் காணொளியிலே தந்துவிட்டார் எனக்கு அதனால் மற்றதைப் பார்க்கவில்லை . ஆதித் தமிழனே முதல் வைத்தியன் என்று கூறி விடைபெறுகிறேன் . தொடரும் ...

கல்லாய்க் கனக்குதடிக் காரணம் சூதடி !

ஆயிரம் தேர்வர ஆதுரம் தேடுமடி 
ஆயிரம் கோடியில் ஆரெனத் தேடுதடி 
கோயிலின் கோணமும் கூரென ஆனதடி 
தேயிலைத் தேய்பிறை நானெனும் நாதனடி 

நாதனடித் தேடிவர நாளுமதுக் கரையா 
பாதவடி வானதடிப் பாரமெது மழையா 
வாதமடி நோகுமென வாழுமுயிர் நிலையா 
போதையடிப் போகுமடிப் போனதெருப் பிழையா 


பிழையா ! பிரிவா ! பிடிவாதம் பிதற்ற 
அழையாய் அறிவாய் அழகாண முதற்றை 
முழுதாய் முதலாய் முறையாய்ச் சுழலும் 
நுழையாய் நுணியாய் நிரம்பும் உலகு 

உலகயுத்த சப்த்தம் ஊரில் இல்லையா 
உலவவித்தைக் கற்க ஊற்றும் தில்லையா 
புலம்பநித்தம் ஏற்பாய்ப் பூர்வம் தில்லையா 
பலனுமற்றப் பந்தம் தீர்வுச் சொல்லையா

சொல்லால் அடிக்குதடிச் சோதனை ஏனடி 

கல்லாய்க் கனக்குதடிக் காரணம் சூதடி 
வெல்லா வெறும்படியே வேள்விகள் வேண்டுதே 
கொள்ளாக் கொடுக்குமதன்  கோர்வைகள் கோணமுள்

கலியுகம் : தொடரும் 

செவ்வாய், 15 மே, 2018

வாங்கச் சுவைத்து உண்ணலாம்

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம் நலம் நலம் அறிய ஆவல். கொஞ்சம் தூசு தட்டிப் பொட்டியை அழுத்தலாமென்று நினைத்து வந்தேன் மறுக்கா வணக்கம் வச்சுக்கிறோனுங்க . 

என்னடா இவன் எழுதுவதே புரியாது இதுல வணக்கம் வேற வச்சிருக்கான் , அதும் தலைப்பு ”வாங்க சுவைத்து உண்ணலாம்”னு வேற வச்சிருக்கான் என்ன பண்ணப் போறானோ எல்லாம் அவன் செயல் . அதே தாங்க அப்புடியே உங்களோட மனநிலையிலிருந்து எழுதுகிறேன் . 


சரிங்கப் பதிவுக்குப் போயிடலாம் விட்டா நான் கிறுக்குத்தனமாப் பேசிட்டே இருப்பேன் . அதாகப்பட்டது கடந்த ஆடி மாதம் ஆரம்பித்த குதிகால் வலிப் பாதத்தைத் தரையில் வைக்க முடியாமல் தொடர்ந்து ஐப்பசி-தை மாதம் வரை ஆங்கில வைத்தியம் ஆகார மாற்றம் அப்படி இப்படியென்று குதிகாலில் ஊசியின் மூலம் மருந்தும் செலுத்தினர். விடுவேனா என்றந்த வலி ஆகா ஆகா ஆகா என்று சிரித்துக் கொண்டே இருந்து. 


பக்ரைனில் நம் நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கைச் சுத்தமாகப் போனது ஏனென்றால் குதிகாலினுள் மருந்துச் செலுத்தியும் வலி தொடர்கிறதென்றச் சொல்லுக்கு ! தம்பி நான் வேண்டும் என்றால் இலவசமாக இன்னொரு முறை மருந்து செலுத்துகிறேன் உன் குதிகாலில் என்றார் . எப்படியிருக்கும் எனக்கு என்று சொல்லுங்கள். ஆகா ! தினேசா உன்னை அப்படியே உபயோகிச்சுக்குவாங்கன்னு நம்மக் கிளிச் சொல்ல உள்ளே தெளிவானது. ஒரு மாதம் விடுப்பெடுத்து ஊருக்கு வந்து சேர்ந்தேன் . 





வந்ததும் வந்தேன் பிறந்த மண்ணுக்குப் பிரண்டைத் துவையலும் முடக்கறுத்தான் கீரைத் தோசையும் காலை உணவாக அம்மாவின் கையால் கிடைக்க உண்டுவிட்டு முதல் வேலையாக எலும்பு மருத்துவரை சந்திக்கச் சென்றேன் , அவர் என்னைப் பரிச்சோதித்துக் குதிகாலில் உள்ள சதைப் பகுதிச் சுருங்கிப் போயுள்ளது இருபது நாட்கள் நான் கொடுக்கும் மருந்துகளைக் கழித்து வாருங்கள் குணமாகிவிடும் என்றார் ஆனால் கொடுத்த மருந்துகள் அனைத்தும் வலியை மருக்கச் செய்வதற்காக உண்டானவை. எனக்கு நம்பிக்கைப் போனது பக்ரைனிலும் அதே வலி மருள் மருந்துகள் தான் கொடுக்கப்பட்டது இங்கேயும் இப்படியா என்று சற்று யோசிக்க ஆரம்பித்தேன் . 


மருந்து எடுத்துக்கொள்ளவில்லை. சரியான தீர்வு வேண்டும் என்பதே எனக்குள் எழுந்த கேள்விகள் . அடுத்த நாள் விழுப்புரம் சென்றேன் சித்த மருத்துவம் படித்த மருத்துவரை சந்திக்கச் சென்றேன் சந்தித்தேன் அவர் முதலில் எந்தன் எடையைப் பரிசோதித்தார் 82 கிலோவாக இருந்தது, உங்கள் உடலில் அதிகக் கெட்டக் கொழுப்புகள் அதனால் கல்லீரல் பாதிக்கப்படும் தருவாயில் உள்ளது அதனால் தங்களுக்குக் குதிகால் வலி ஏற்பட்டுள்ளது . உடலின் எடையைக் குறைக்க உணவு முறைகளை மாற்றுங்கள் என்றார். 


அய்யா நான் காலை உணவாகப் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களும் , மத்தியானம் சோறும் சாம்பாரும் அல்லது கூழ் , களி அல்லது கஞ்சும் துவையலும் , இரவில் கேழ்வரகு அல்லது கம்புத் தோசை இப்படி மாற்றி இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றேன் ( ஆங்கில மருத்துவர் இறைச்சியைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னதால் நானாய் தயாரித்த உணவுப் பட்டியலைக் கடைப்பிடித்தேன் ). 



சித்த மருத்துவரோ நீங்கள் கடைபிடிக்கும் உணவுமுறை தவறு நீங்கள் இனிப்பு வகைகள் அதாவது பழவகைகளே கழிக்கக் கூடாது உங்களுக்குச் சர்க்கரைத் துவங்க உள்ளது என்றார், எனக்கோ மேலும் அதிர்ச்சி. சரி நான் தரும் பட்டியல் படி உணவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பட்டியலைக் கொடுத்தார், நானும் தயாரானேன். 


அதாவது 

காலை உணவு : 

மூன்று கோழிமுட்டை எப்படி வேண்டுமானாலும் சமைத்து எடுத்துக் கொள்ளலாம் 

மத்தியான உணவு : 

ஆடு அல்லது கோழி இறைச்சிச் சமைத்துச் சோறில்லாது வயிற்றுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம் (சோறு மட்டும் எடுக்கக் கூடாது வேண்டுமென்றால் ஒரு கரண்டிச் சோற்றைத் தொட்டுக் கொள்ளலாம்) 

இரவு உணவு : 


முட்டை அல்லது இறைச்சி 


இடையிடையே பசித்தால் எலுமிட்சைச் சாறு அல்லது தயிர் மோர் அல்லது பாதாம் எடுத்துக் கொள்ளலாம் . 


ஒட்டு மொத்தமாகச் சொன்னால் இறைச்சி முட்டையைத் தவிர வேறெதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது இதானுங்கு . 


அவரும் சில பல குளிகைகளைக் கொடுத்தார் சா.மு , சா.பி என்று மனதையும் வாயையும் கட்டிப் போட்டுவிட்டுச் சம்மதித்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கினேன் . முதல் நாள் மிகவும் சிரமப்பட்டு உணவருந்தினேன் முதல் நாள் மட்டுமல்ல பதினைந்து இருபது நாட்கள் சிரமப்பட்டே உணவருந்தினேன் ஏனென்றால் நான் விரும்பி உண்வதோ சாம்பாரும் காய்கறிகளும் அதை விட்டுவிட்டு இறைச்சியை உண்வது எனக்கு அதிகம் பிடிக்கவில்லை . 


சரி வலிக் குறைந்ததா என்றால் அதுவும் இல்லை எடையாவது குறைந்ததே கொஞ்சம் என்றால். 


பின்னக் குறையாம என்னப்பண்ணும் ”விரும்பிச் சுவைக்காத உணவு” என்ன பயன் தரும் என்று நீங்களே சொல்லுங்களேன் 


கலியுகம் : தூசெல்லாம் தட்டியாச்சு அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன் இதுவே நீளமாக இருக்கிறது . கவிதைக்காரனுக்கு என்ன ஆயிற்று என்று புலம்ப வேண்டாம் . கண்டிப்பாக இந்தப் பதிவின் தொடர் வந்து கொண்டே இருக்கும் . நீங்களும் வாங்கச் சுவைத்து உண்ணலாம்

திங்கள், 2 அக்டோபர், 2017

இன்று பொருந்துமென ...!

இன்று பொருந்துமென இருந்தாரில்லை 
இன்னல் திரியுமென வளர்த்தாரெல்லை 
அன்று மருந்துமென அருந்தாரில்லை 
அன்னம் அரியுமெனக் கிடந்தாரில்லை 
நின்று நடந்தன விளைத்தாரெல்லை 
நித்தம் கடந்துயர் உடைத்தாரெல்லை 
ஒன்றை உணர்ந்திட அடைந்தாருள்ளே 
ஒன்றாய் உரைந்திட அடைந்தாரெல்லை



திங்கள், 6 பிப்ரவரி, 2017

4.மாய மனதில் துளிர்த்தவை...!

மக்களைக் காக்கும் மாரி மகமாயி 
மன்னவன் கோலை மாற்றும் மயமாக 
சிக்கலைத் தீர்ப்பாய்த் தாயே தயவே;நீ 
சித்திரம் கொண்ட சீற்றம் உனதாக 
சுக்கிலாத் தூளாய்த் தூற்றுத் துவண்டோடும் 
சுந்தரம் மீண்டுத் தோன்றும் அரும்பாக
வக்கிரப் பேயை மாய்த்து மழையாகு
வந்தெமைக் காக்கும் தாயே மகமாயி

காலம் கனிவதிலே கோணங்கள்
கானல் எனப்பதியக் கூறுங்கள்
கோலம் எனத்தணியாக் கோளத்தில்
கோழை எனப்பனிந்தான் கூடத்தில்
வேலன் கனவுகண்ட வேடங்கள் 
வேளை வரமுயன்றும் தேக்கத்தில்
பாலம் படகிலென்றான் ஞானத்தால்
பாராய்ப் பழகுமென்றான் ஞாயத்துள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

3.மாய மனதில் துளிர்த்தவை...!

வெந்துதான் தணிந்ததெங்கும் கூடு 
வித்தகன் அணிந்ததவுருச் சாம்பல் 
பந்துதான் பணிந்துவிடும் என்றால் 
பந்தமும் துறந்ததிந்தக் கூட்டை 
சுந்தரம் சுகமருந்தாய்த் தோற்றம்
சுக்குதான் தவமிருந்தோ தேற்ற
விந்தைகள் தயவறிந்தக் கூற்றால்
விஞ்சுதல் பதுமைகளாய்த் தோன்றும்

சனி, 4 பிப்ரவரி, 2017

2.மாய மனதில் துளிர்த்தவை...!

1.நரசிம்ம அரிதாரம் பூச்சிட்டு 
நடக்கட்டும் அவதாரம் ஒன்றென்றே
அரியெண்ணப் பரிகாரம் தந்தாலும் 
அவனுண்ண பலகாரம் தந்தாயே
வரமொன்றும் கொடுப்பானோ என்றாடி
வயலெங்கும் பெருங்காற்று வீசிற்றோ
தரமென்றுத் தரவாகத் தங்கிற்று
தயவென்றுத் தலைதூக்கி வைத்தாடு

2.களவற்ற கண்ணே மணியே 
....குணமுற்றத் தன்னா லறிவாய் 
இளங்கன்றே இன்னார் இதயம் 
....இரும்பென்றக் கொள்கை மாற்று 
களத்தமேடுக் கழனி வாழ்வை 
....வருங்காலம் ஏற்க உணர்த்து 
கருத்துவிரை யும்பா ராது 
....பயங்களைந்து ஏறாய்க் கொழுந்தே ...

3.கற்றறிந்தோர்ச் சிந்தனையில் உதியும் கவியே 
பாக்கியமுண்டாகும் அவர்க்கு வழிபோன என்னை 
நிறுத்திஉள் புகுந்ததேனோ அறியேன் அறியேனே 
உன்னை அறிவார் உள்புகும் அன்னமே 
விட்டுசென்றாலும் தொட்டெனைத் தொடராய் 
தோல்வி யெனதில்லை தோற்றம் கொடுத்தேன் 
கல்லேன் கல்லேன் என்றல்லக் கல்லுவதென்று 
காயாகிப் பழமாகும் கோலம் உகந்ததே நான் 
கல்லாது கடந்துவிட்டேன் கொல்லாது கொள்ளும் 
தாயே என் தமிழன்னாய் நீயே பதில் கூறு ....
Image result for சிந்தனை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி