வியாழன், 2 பிப்ரவரி, 2017

1. மாய மனதில் துளிர்த்தவை ...!

1. குதிரை ஏறியே குற்றம் 
குரவை ஆடிடும் மேடை 
சதியை ஆற்றிய ஒற்றன் 
சரணம் பாடிடும் மேடை 
உதிரம் ஓடிட மொத்தம் 
உணர்வைத் தூண்டிடும் மேடை
கதியைத் தேடியே சுற்றும்
கவனம் ஆண்டவன் மேடை....

2.உற்றவை ஏற்றுச் செல்ல 
உருத்துதாம் ஊராய்க் கொள்ளார்க்கு 
அற்றவை நேற்றில் கொண்டு 
அளந்திடும் கூற்றில் சோறாக்கும் 
கற்றவர் பூண்டக் கார்யம் 
கவர்ந்திடக் கோர்க்கும் போர்வைக்குள்
பற்றவை தோற்றம் தீயாய்
பறந்தது போற்றும் கோணத்தால்



3.கயிலை நாதனே காளை வீரனே 
கானல் போக்கியக் காலச் சூரனே 
மயிலை வீற்றிர நாளும் தேடினோம் 
மாலைச் சூடிட மாற்றம் வேண்டினோம் 
பயிலும் மாணவர் பாலர்த் தானவர் 
பாலம் போடவே பாதை நாடினோம்
ஒயிலாய் நின்றொரு காட்சித் தந்திட
ஒன்றாய்க் கூடிய தேரில் சாட்சியாய் ..

4.நிரந்தரமே தலைமுறைக்குத் தீர்வு 
நிழலெனவா நடைமுறைக்குச் சோறு 
அறிந்திடடா அவலநிலை ஆட்சி 
அமைந்ததுவே அகிலமெல்லாம் சாட்சி 
புரிதலில்லா அமைச்சரவைக் கூட்டம் 
புதுயுகமாய்ப் பிறக்கவிடா ஆட்டம்
நரியெனவே நடந்துகொள்ளும் காட்சி
நடந்தவையோ நடிகனெனும் சூழ்ச்சி

5.ஆதிசிவன் காளையுடன் வந்துவிட்டான் தமிழனென்றே...! 
அம்மையப்பன் ஆகநம்மை ஆளுகின்றான் தமிழனென்றே...! 
சாதிகளை விட்டெழுந்த வேள்வியிலே தமிழனென்றே...!
சாதகமாய் மாமருந்தைச் சாரமிட்டான் தமிழனென்றே...!
நீதிமுறைத் தாண்டவத்தில் மீளுகின்றான் தமிழனென்றே...!
நீண்டவொரு போர்படையை மீட்டுவிட்டான் தமிழனென்றே...!
பாதியிடம் பார்வதிக்கே பங்களித்தான் தமிழனென்றே...!
பாதையினைச் சீர்படுத்த சீடனுருத் தமிழனென்றே...!

சனி, 14 ஜனவரி, 2017

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

தாயாகித் தகப்பனாகித் தானுமானச் சேயுமாகி
தான்தோன்றித் தவக்கடலே இன்னார்க்கும் இல்லார்க்கும்
ஆயாது அருள்புரியும் ஆகாயம் மீதமர்ந்த
ஆதார அலையான ஆதிக்க ஆழ்மனமே
தீயான சுடர்தங்கி நீங்காத தீர்வாகி
திண்டாடும் அழைப்பினிலே சீரான வான்ஒளியே
தேயாத அணுவாகிச் சேதாரம் சேர்த்துண்ட
சீவனே;ஓம் நமசிவாய நாதனருள் போற்றிபோற்றி...

அனைவருக்கும் இனிய

தைத் திங்கள் ...!
தைப் பொங்கல்...!
தைத் திருநாள் ...!
உழவர்த் திருநாள் ...!
தமிழர் திருநாள் ...! வாழ்த்துகள் ...!


ஞாயிறு, 17 ஜூலை, 2016

இனியோர் நாளும் வருவதில்லை...!


இனியோர் நாளும் வருவதில்லை 
இளமை நாளை தொடர்வதில்லை 
கனியைக் காயை உணர்தலையும் 
கழித்துக் காலங் கடத்(ந்)திடுறாய் 
அணியைத் தானாய் கவர்ந்திடவே 
அறிவைக் கோர்த்தே வழிவகுத்தான் 
மனிதா மாயை மயமதைத்தான் 
வணங்கி நீயும் அடைந்திடுவாய்

சனி, 16 ஜூலை, 2016

தேர்வெழுதி நாளும் மாயும் மெய்கள்...!


காசிருக்கும் பக்கம் வேசி வேடம் 
காய்ந்திருக்கும் பக்கம் பூசி மூடும் 
ஊசிநுழை வாயில் போடாத் தையல் 
ஊர்செனத்து வாயில் பாயும் நீதி 
தேசமொரு கோட்டில் போகுங் கோணம்
தேர்வெழுதி நாளும் மாயும் மெய்கள் 
மாசிலாது மக்கும் தீர்ப்புள் மோதி 
மாயமான தெங்கும் மக்கள் காப்பு

கூத்தாடிக் கூத்தாடி விட்டுப் போகவேண்டும் 
கூறாக்கிக் கூராக்கிக் குத்திப் போகவேண்டும் 
ஆத்தாடி ஆத்தாடி அங்கம் பங்குவேண்டும் 
ஆராத ஆறாக்கி நீண்டு ஓயவேண்டும் 
காத்தாடிக் காத்தாடிச் சிட்டுப் போலவேண்டும் 
காணாதுக் காணாதே கட்டுப் போடுவேண்டும் 
சே(ர்)த்தாடிச் சேர்த்தாடிச் செத்துப் போகவேண்டும் 
சேறாக்கிச் சோறாக்கித் தின்று போகவேண்டும்


வியாழன், 14 ஜூலை, 2016

சர்வம் சிவமயமாய்...!


தர்மம் தனதுடைமைத் தங்கத் தடைத்தகரேன்
தன்னில் தனியனாகும் தங்கச் சுடரெனவே 
மர்மம் உடைத்தெரிய எங்கும் வளம்வருவ 
மண்ணில் மனிதனாக ஏங்கும் மலர்களுமே 
கர்மம் தொடர்ந்துவரும் கக்கும் கனலையும்தான் 
கண்ணின் இமையதுபோல் காக்கும் அரண்களிடு
சர்வம் சிவமயமாய் சக்தி உடன்பிறக்கும்
தன்னில் நிகழ்வுடுத்த சக்தித் தனிலுயிர்ப்பாய்




ஆலயம் முழுதும் வலுப்பெற வேண்டும்
ஆண்டவன் என்றேக் கடனுற வேண்டும்
பாலகன் எனுவான் பலம்பெற வேண்டும்
பாண்டவன் என்றோர் பயமர வேண்டும்
நாளதில் நிகழ்வும் நடைபெற வேண்டும்
நானென அன்றே வளம்வர வேண்ட
மாளென மறந்தே மருந்திட வேண்டும்
மாயனும் அருந்த மறுமலர் ஆவான்





கிட்டாதோ என எண்ணிக் கேள்விகுள்ளே...!


நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை 
நீ என்ன சொன்னாலும் கோபமில்லை 
எக்கேடு கெட்டாலும் எனக்கு இல்லை 
தப்பாதுப் போனாலும் கவலை இல்லை 

கொட்டிக் கொடுத்தாலும் கோடி எல்லை 
வட்டிக் கொடுத்தாலும் மாடி இல்லை 
தட்டிக் கொடுத்தாளும் தாய்மை இல்லை 
பட்டி அடைத்தானோ பாவம் உள்ளே 

சிட்டாட்டம் சிறகடிக்க முடிவதில்லை 
பட்டத்துப் படிகட்டே பாழுதெங்கும் 
விட்டாள விதியொன்றும் வீதியல்ல 
முட்டாளாய்ப் புகழ்தாங்கிப் போவதெங்கே 

பட்டாலும் படியேறப் பாகமுள்ளே 
பட்டாசு வெடித்தாளும் பாறையல்ல 
கட்டாத படியொன்றுக் காணுதுள்ளே 
கிட்டாதோ எனஎண்ணிக் கேள்விகுள்ளே 

தப்பாட்டம் தலையாட்டிப் போகுதெங்கும் 
நிப்பாட்டும் நிலையாய்ந்துப் பாருமண்ணே 
செப்பாட்டம் கடத்திட்டுப் போகவில்லை 
முப்பாட்டன் முனைந்தவழிப் போனதில்லே... 


-மோ.தினேசுகுமார்- 




வியாழன், 17 மார்ச், 2016

தேர்வுன் தெளிவின் சாரம்...!

என்னச் செய்து விட்டாய் 
            ஏனோப் பிழையாய் துளிர்த்துவிட்டான்
மின்னல் தோற்று வித்தாய்
            மீறாத் தமிழன் சிலிர்த்துவிட்டான்
பின்னல் நெய்த முற்றுப்
            பேரால் அழையாய் முளைத்துவிட்டான்
இன்னல் தூண்டில் இட்டாய்
            ஈன்றா மழையாய் மகவெழுந்தான்



நேரும் கொடுமைக் காலம்
           நேற்றின் முடிவும் ஆகா
வேரும் மணலைத் தாண்டி
           வீழா திருக்க வேண்டி
கூராய் அடியைத் தோண்டும்
           கூற்றுள் முடியாக் கர்மம்
தேருன் தெருவில் ஓட
          தேர்வுன் தெளிவின் சாரம்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி