செவ்வாய், 8 மார்ச், 2016

சொக்கன் அமைத்த மேடை...!

தொங்கித் தொடரும் பாதை
சொக்கன் அமைத்த மேடை
பொங்கும் பருவம் தாண்டி
பொய்யுள் அடைத்த மாயை
சங்கத் தமிழுள் ஆழ்ந்துச்
சந்தம் தொடுத்த மேன்மை
எங்கும் பெருமைச் சேர்த்தே
எண்ணம் அடையும் சீவன் - சிவனே



அப்பனை நினைத்துச் சுப்பன்
அர்பனென் றனைத்தும் வற்ற
அப்பனும் சிறையில் ஒற்ற
அர்ச்சனைத் துளிர்த்த துள்ளே
சுப்பனில் உயிர்த்தான் அப்பன்
சொக்கிட விளைத்துச் சென்றான்
குப்பனும் முறையாய் நிற்க
கொற்றவன் நிறைவா னெங்கும்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஆடி வெள்ளி ...!


ஆடி வெள்ளி அன்னை
அன்பை அள்ளித் தந்தாள்
நாடி வந்து மண்ணில்
நாளும் விந்தைச் செய்தாள்
ஆடும் தந்தை தன்னில்
ஆளப் பாகம் தந்தார்
தேட லுந்த உள்ளத்
தேரில் ஆடி வந்தாள் (அன்னை)
மாரி அம்மன் தாயே
மனமி ரங்கி வாநீ
நேரி லுன்னைக் காண
நிலவும் தர்மம் நீயே
வாரி அள்ளித் தாரும்
வசந்தம் எந்தன் தேவி
பாரில் வள்ளல் நீயே
பசிக்கும் உண்ண வாநீ
கூழும் அருந்த வாரும்
கும்பஞ் சோறூம் தாறோம்
ஏழை எதையும் பாறோம்
இன்னல் மட்டும் தீரும்
வாழ வழிகள் போதும்
வந்து உண்டால் போதும்
சோழ மன்னன் ஆண்ட
சொர்க்கம் எங்கள் பூமி

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வருக வேல் முருகா...!


தனதன தான தனதன தான
.. தனதன தான .. தனதான
அகமன தாக அழகுரு மாயை
...அரிதென வாக ... அடையாரும்
...அலைகட லாக அதனுரு மேவி
...அலைவது லோக ... அடையாலம்
பகடைக ளாட வழிவுரு மாற
...பகைவனு மாள ... பலனாகும்
...பகலவ னாளு மயமுரு வாக
...படைகள மாக ... அருள்வாயே
சுகமன மேற அடர்வன மாயை
...சுருதியி லாட ... மயமானேன்
...தகுதியி லாது நிகழுவ யேது
...தரமது மாட ... மலராக
மகவென ஆன மழலையு மாகி
...மனமொடு ஆள ... பிறவாயே
...வருகவெ வாழ வழியது மாகி
...வளமொடு மாயை ... உடனால
-மோ.தினேஷ்குமார்-

வியாழன், 25 ஜூன், 2015

"உத்தம உருவிது...! "


அச்சனை அடையவெ அக்கரை முழுகுவ 
      அத்திசை மறைவது அதுகாண 
      அற்றது மகிழுவ விற்றவை அமருவ 
      அப்பழ மறைமுகம் உடனேறும் 

மச்சமு மறையுவ மட்டமுள் முழுகுவ 
       மற்றிணை மறையுடு மனதாலே
       வட்டது வலியது வற்றுவ வரவர
       வக்கென வரம்பெறு துனிவாலே


உச்சினி லருகிடும் உத்தம உருவிது
      உக்கிர உடையது உதவாது
      உற்றவை உறையுவ எக்கிய வினையது
     ஒற்றுவ மறுமக மயமேவி


சச்சடி மயமுனை இத்துணை அனுகுவ
    தக்கிட மருளுவ தயைதானே
    சத்திய விதியது மத்திய மதியது
    தத்தெடும் தரகது மறவாதே


செவ்வாய், 19 மே, 2015

"கதம்பம்"

1.கண்ணனென் அன்பிற் கடியானே 
       கற்றுழப் பந்தப் படியாகேன் 
வண்ணம்முன் சந்தக் கொடியாகி 
       வந்தவன் சொல்லப் பிடியாவேன் 
எண்ணமென் சிந்தைச் சுழலாட 
       எண்ணுவன் விற்றப் பழமானான்
விண்ணவன் தொட்டுத் துதிபாட
       விந்தையின் சுத்தச் சுடரானான்

2.மேவத் தாகத் தனிவாகும் 
       மேளத் தாளத் துணையோடும் 
ஆவித் தாழத் தெளிவாக
       ஆரத் தூரத் துணிவாகும் 
பாவக் கோளக் கரமாகும் 
        பாரத் தானைத் தொழுதாளும்
சாவித் தேடித் திரியாது
        சாரத் தூதத் தயவாகு

3.காதலுரு வேதம் காணாவெண் மேகம் 
        காரூரும் மோகம் காணாய் 
பாதமிடும் வேடம் பாராளும் நேரம் 
        பாடாத ராகம் பாடாய் 
தூதனிடும் வேடம் தோதான தாகும்
        சீராளும் தேகம் சூடாய்
வாதமிரும் கூடும் மாறாது நாளும்
        வாதாடும் பேதம் மாறாய்



4.ஆட ஒருத்தி அலங்காரம் பொருத்தி 
கூட ஒருத்திக் குறிசொல்லும் குறத்தி 
பாட ஒருத்திப் பலகாரம் உணர்த்தி 
தேட விருத்தித் தெளிவாகும் படுத்தி

5.அரிதாரம் பூசி அரங்கேறி ஆட
பரிகாரம் உண்டா பகவானும் கூட
சரியானத் தோற்றம் சமமாகும் நாட
அரிதாக மாற்றம் அரணாகும் சூட

6.காணாக் கருவாகும் காணாப் பழமேநீ 
காணாப் பதமேறும் காணாய்த் துணிவேற 
காணோர்ப் பொழுதேனும் காயாய்த் தவமேனி 
தூணாய்த் தனியாகின் சேயாய்ப் பெருமானும்

7.நேரமும் தோரனை நீள நிகழ்வின் நிழலடுக்கும்
சாரம் கடத்தும் சகலமுன் கம்பீரத் தன்னெழிலும்
பாரம் குறைந்தப் பருவம்முன் பார்த்துப் பழகிடுதல்
காரணக் காரியக் கட்டட மாயக் கதிர்களிலே

8.தேடி ஓடிடும் தேவத் தூதனே 
தேட ஆடிடும் தேகத் துள்ளதே 
மாட மாளிகை மாயத் தூணதே 
நாடும் மானிடன் ஞானத் தீர்விதே

9.ஆடும் குறத்தி ஆட்டம் துறத்தி 
பாடும் குறித்தும் பாட்டும் விரட்டி 
தேடும் புறத்தில் தீட்டும் புரட்சி 
வாடும் மனத்தை மாட்டும் பொருத்தி

10.ஆலகாலம் உண்டுநீ அகிலமாண்டச் சங்கதி 
பாலனாகும் பந்தம்முன் பசித்திருக்கேன் சொல்லிடு 
ஆலங்காய்த் தக்கிளையி லாடுதந்த மோகமுள் 
நாளுங்காத்து நின்றதன் நாதமுந்தன் ஞாயமே

திங்கள், 20 ஏப்ரல், 2015

"கர்மமெதோ கூற்றுமாகி"


1.கண்டதும்கொள் காரியமே மாயையாகும்
         காரணச்சொல் காணத் திறவும்
கொண்டதும்கொள் கர்மமெதோ கூற்றுமாகிக்
         குன்றமர்ந்து கொண்டே கொடுக்கும்
கொண்டவுருக் கண்டததே கோளமிரும்
         கோயிலெங்கும் கூத்தன் குடிலாய்
வண்ணமலர்த் தோட்டமெங்கும் வந்தமருந்
        தென்றலுடை மாற்ற மயங்கேன்


2. கொண்டவன் கொள்ளக் கொடுத்தே கொலுவிரும் கோளத்தில்
கொண்டையில் கொன்றையும் கூந்தலில் கங்கையும் சூலமுடன்
தொண்டையில் ஆலகாலம் தீண்டிடும் நாகப் பதமணியாய்
தொண்டனுன் தோற்றத்தைத் தீட்டிவிட்டான் தங்கிடும்நீ ஆட்கொள்ளே


3. கண்டவர் காணாக் கடவுவர் தானகமே 
கண்டவர் காணக் கயவரும் ஆனவரே
கண்டவர் காணுங் கடனுரு வானவரே
கண்டவர் ஞானக் கருபொரு ளானவரே

4.
கோபத்தீ மூட்டாதே கோணத்தை மாற்றாதே 
சாபத்தை ஏற்காதே சாரத்தைத் தூற்றாதே
தீபத்தைப் போலுந்தன் தேகத்தைக் கற்றாலே
தாபத்தீ விட்டோடும் தானென்றேத் தானாகும்

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

"கூற்றிலே கூத்தினைக் காண !"

1.சித்திரப் பூவினிற் தேனோ 
       சிந்தையி லூற்றெடும் தேனோ 
சத்திர யெந்திரம் தானோ 
       சந்தையில் விற்றுவந் தானோ 
சித்தனும் சத்திரம் தேட 
       சீதன மாகிடு வேனே
சித்திரக் கட்டடம் தங்க
      சிந்திடும் தூரிகை ஆவேன்

2.கூற்றிலே கூத்தினைக் காண 
      குந்திடுங் கூட்டமில் நானும் 
சேற்றிலே செம்மையைக் காண 
      சேர்ந்திடும் பொன்வயல் ஆடல் 
காற்றிலே கானலின் தூது 
      காலமும் மாறுதோ பாடம்
நேற்றவன் நெய்தது யாதும்
      நீர்த்ததன் வேர்த்துளி ஆகும்

3.கனவிலு மாறாக் கணமேன் 
      கதவுக ளாடா மனமேன் 
நினைவுக ளோடே சமரேன் 
      நிழலதுப் போகா வடுவேன் 
கனிவது தானே பழமாம் 
     கடவது காணாப் பதமேன்
மனமது மாயா மரமே
     மறையது மாறா மயமே

4.வாடி சதியே வழியின்
      வனம்என் மனமாய்ப் பதியும் 
நாடி நகரும் நதியாய் 
       நலனில் நழுகா திருக்க
பாடி விழையேன் பதிநான் 
       பழமைப் பதிவாய் அமர்வேன்
தேடும் கடலில் அலையாய்த்
      திரண்டேன் தினமும் உனதாய்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி