ஞாயிறு, 17 ஜூலை, 2016
சனி, 16 ஜூலை, 2016
தேர்வெழுதி நாளும் மாயும் மெய்கள்...!
காசிருக்கும் பக்கம் வேசி வேடம்
காய்ந்திருக்கும் பக்கம் பூசி மூடும்
ஊசிநுழை வாயில் போடாத் தையல்
ஊர்செனத்து வாயில் பாயும் நீதி
தேசமொரு கோட்டில் போகுங் கோணம்
தேர்வெழுதி நாளும் மாயும் மெய்கள்
மாசிலாது மக்கும் தீர்ப்புள் மோதி
மாயமான தெங்கும் மக்கள் காப்பு
கூத்தாடிக் கூத்தாடி விட்டுப் போகவேண்டும்
கூறாக்கிக் கூராக்கிக் குத்திப் போகவேண்டும்
ஆத்தாடி ஆத்தாடி அங்கம் பங்குவேண்டும்
ஆராத ஆறாக்கி நீண்டு ஓயவேண்டும்
காத்தாடிக் காத்தாடிச் சிட்டுப் போலவேண்டும்
காணாதுக் காணாதே கட்டுப் போடுவேண்டும்
சே(ர்)த்தாடிச் சேர்த்தாடிச் செத்துப் போகவேண்டும்
சேறாக்கிச் சோறாக்கித் தின்று போகவேண்டும்
வியாழன், 14 ஜூலை, 2016
சர்வம் சிவமயமாய்...!
தன்னில் தனியனாகும் தங்கச் சுடரெனவே
மர்மம் உடைத்தெரிய எங்கும் வளம்வருவ
மண்ணில் மனிதனாக ஏங்கும் மலர்களுமே
கர்மம் தொடர்ந்துவரும் கக்கும் கனலையும்தான்
கண்ணின் இமையதுபோல் காக்கும் அரண்களிடு
சர்வம் சிவமயமாய் சக்தி உடன்பிறக்கும்
தன்னில் நிகழ்வுடுத்த சக்தித் தனிலுயிர்ப்பாய்
ஆலயம் முழுதும் வலுப்பெற வேண்டும்
ஆண்டவன் என்றேக் கடனுற வேண்டும்பாலகன் எனுவான் பலம்பெற வேண்டும்
பாண்டவன் என்றோர் பயமர வேண்டும்
நாளதில் நிகழ்வும் நடைபெற வேண்டும்
நானென அன்றே வளம்வர வேண்ட
மாளென மறந்தே மருந்திட வேண்டும்
மாயனும் அருந்த மறுமலர் ஆவான்
கிட்டாதோ என எண்ணிக் கேள்விகுள்ளே...!
நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை
நீ என்ன சொன்னாலும் கோபமில்லை
எக்கேடு கெட்டாலும் எனக்கு இல்லை
தப்பாதுப் போனாலும் கவலை இல்லை
கொட்டிக் கொடுத்தாலும் கோடி எல்லை
வட்டிக் கொடுத்தாலும் மாடி இல்லை
தட்டிக் கொடுத்தாளும் தாய்மை இல்லை
பட்டி அடைத்தானோ பாவம் உள்ளே
சிட்டாட்டம் சிறகடிக்க முடிவதில்லை
பட்டத்துப் படிகட்டே பாழுதெங்கும்
விட்டாள விதியொன்றும் வீதியல்ல
முட்டாளாய்ப் புகழ்தாங்கிப் போவதெங்கே
பட்டாலும் படியேறப் பாகமுள்ளே
பட்டாசு வெடித்தாளும் பாறையல்ல
கட்டாத படியொன்றுக் காணுதுள்ளே
கிட்டாதோ எனஎண்ணிக் கேள்விகுள்ளே
தப்பாட்டம் தலையாட்டிப் போகுதெங்கும்
நிப்பாட்டும் நிலையாய்ந்துப் பாருமண்ணே
செப்பாட்டம் கடத்திட்டுப் போகவில்லை
முப்பாட்டன் முனைந்தவழிப் போனதில்லே...
-மோ.தினேசுகுமார்-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது
