வியாழன், 27 பிப்ரவரி, 2014
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
பொய்யுரை பெய்யுமின் தேக்கமே...!
என்னை கொலைசெய்ய கோடிக்கூர் ஆயுதம்
தேவை எண்ணச் சிலாம்புகள் வர்ணமாய்
கர்ணக் கனவினில் தாக்க புலரும்மெய்
பொய்யுரை பெய்யுமின் தேக்கமே....
தேவை எண்ணச் சிலாம்புகள் வர்ணமாய்
கர்ணக் கனவினில் தாக்க புலரும்மெய்
பொய்யுரை பெய்யுமின் தேக்கமே....
சாயல் உணர்வதன் காயம் விழுப்புண்
தகிக்க விடியலின் தாகம் விருப்பதன்
தோற்றம் விளைவதைப் போற்றும் புகட்டு...
வடிவழகு நாடும் நிலையழகு சூடும்
மதியழகு மாறும் மனமழகு சாரும்
தினமழகு கூட்டும் குணமழகு தேட
அதனிருள் நீங்கும் நலமே...
மதியழகு மாறும் மனமழகு சாரும்
தினமழகு கூட்டும் குணமழகு தேட
அதனிருள் நீங்கும் நலமே...
நீரோடும் பாதை வகுத்தவர் யாரறியே
நானோடும் பாதை வகுத்த வழியென
போராடும் பொய்க்களம் தானிது தந்திர
எந்திரம் போர்த்திய அந்தரம் ...
நானோடும் பாதை வகுத்த வழியென
போராடும் பொய்க்களம் தானிது தந்திர
எந்திரம் போர்த்திய அந்தரம் ...
நானென்ற நான் தன்னை குறிக்க
நனவென்ற நான் உண்மை உதிர்க்க
நயமென்ற நாண் உள்ளில் புகுத்த
நரனெண்ணும் நான் காணுவேன் நானில்...
நனவென்ற நான் உண்மை உதிர்க்க
நயமென்ற நாண் உள்ளில் புகுத்த
நரனெண்ணும் நான் காணுவேன் நானில்...
”கா”ரியம் ”த”டைபடும் மோத”ல்”
காற்றாய் கனலாய் நினைவில்
ஊசலாடி நித்தம் என்னைச் சுற்ற
கர்ப்ப கிரகமா நான் ? அலைகள்
ஓயாது புரண்டு புரண்டு மேலெழ
சொல்ல நினைப்பதும் ஏதோ தடுப்பதும்
மெல்ல வழியைத் துழாவும் செல்லென
சொல்லா செவிபடிய தாழா உழவும்
மனமது கோட்டையே உள்ளது
செய்வத றியாது பிதற்றும் சித்தம்
மெய் தவரும் மொத்தம் மூழ்கிய
பொய் யென மெய்யாய் பொழியும்
புரட்சித் தலையாடும் கோர்வை
தேடிப் போவதென் போக்கு எனினாலும்
கூடிப் பிழைக்க குடியவனை நாடி
வருவாளே நாணமுடன் உன்னவள் தேடல்
நிலைக்க உளத்தையேச் சூடு
கர்ப்பகிரகம் தானடா நீயும் உள்ளவனை
அமர்த்தியா ளுங்கொடை கொண்டான் யுவன்
அத்தகைய சுத்தச் சுகந்தம் அடையும்
பேராணந்த பேருவ மெய்யருள் பொய்யே....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது
