கட்டி வைத்த கூட்டுக்குள்ளே கட்டவிழ்த்து பறந்ததடி நித்தம் பொங்கும் பானைப் போலே நினைவில் அலைகள் கூடுதடி சத்தம் போடா யுத்தம் ஒன்று அந்தி சாய வந்தமரும் பக்குவமாய் வாக்குப்பட வாத்தியக் கட்டு வேண்டாமடி கூட்டுக்குள்ளே குருவிச் சத்தம் குறுகுறுக்க செய்யுதடி வேடம் இனி எனக்கெதற்க்கு வேர்வை தங்கும் மேனியடி கானி நிலம் காணும் கனா களையாது காத்திருக்கு கானகத்தே கரைத்தட்டி பாட்டன் சொத்து பகிர்ந்த தற்க்கு வீட்டு முக்கில் விரிசலடி சோறு திண்ணு நாளாச்சு சோலைகுயிலே நீ ஓடி வா அருகே....