
தமிழே என் தமிழே ..! அன்னை
உன்னை மூலமெனக்கொண்டு
முன்னுயர ஆசையின்றி தமிழ்
முதனெழவே ஈடாக வகுத்திருந்த
முன்னெழு பின்னெழு முற்றமிழை
தமிழ்க்கு தமிழ் மூலம்
அறிந்திட்டாய் உன் மூலம்
தமிழ் செழிக்க நீ தொகுத்திருக்கும்
தொகுப்பிலக்கம் முதல் இலக்கியம்
என் மூத்த தமிழுக்கு அறிதிருக்கும்
அவனியில் பிரிதிருக்கும் எங்கும்
துளிர் துளிர் துளிர்த்திருக்கும்
மண்ணில் தழைத்திருக்கும்
விண்ணுயர முளைத்திருக்கும்
கடுகளவு கற்றுள்ளேன் என்னுள்ளில்
என்னுள்ளிருந்து எனை திருத்து
எனையாளும் தமிழே தமிழ் செழிக்க
சரணடைகிறேன் உன்பாதமத்தில்
என்னில் மரணித்து மரணித்து
மீண்டு உயிர்பித்து உயிர்பித்து
தொடர்ந்துன்னை தொடர்வேன்
தமிழ் தொண்டாற்ற மண்ணில்
வழி நடத்து தமிழ்த் தாயே
உன் பாதமத்தில் வீழ்கிறேன்......
கலியுகம் : அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..... தமிழ் அன்னைக்காக மீண்டெழும் பதிவு