புதன், 16 மே, 2018

ஆகாரம் தேடி வாங்க ஆயுசு அதிகம் தேங்க

சரி வலிக் குறைந்ததா என்றால் அதுவும் இல்லை எடையாவது குறைந்ததே கொஞ்சம் என்றால். 

பின்னக் குறையாம என்னப்பண்ணும் ”விரும்பிச் சுவைக்காத உணவு” என்ன பயன் தரும் என்று நீங்களே சொல்லுங்களேன் .

உணவின் சுவையையும் சுவையில்லாது விருப்பத்திற்கு மாறாக உண்பதையும் உணர்த்திய நாட்கள். பதினைந்து இருபது நாட்களில் உடல் எடை என்னவோ நான்கிலிருந்து ஆறு கிலோ வீதம் குறைந்திருந்ததே தவிர, குதிகால் வலிப் போன பாடில்லை அதே வலித் தொடர்ந்து என்னை நடக்க விடாமல் துன்புறுத்திக் கொண்டிருந்தது . அந்தச் சமயம் அண்ணன் முறையாக வேண்டும் பள்ளிப் பருவ நண்பருமானவர் நெல்லிக்குப்பத்தில் புகைப்பட நிலையம் வைத்துள்ளார் அவர் பொழுதுப் போகவில்லை என்றால் அவருடன் சென்று உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம் ஊரில் இருக்கும் பொழுது.

அவருடன் இந்தக் குதிகால் வலியைப் பற்றியும் தற்சமயம் உண்ணும் உணவு முறையைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருக்கையில் . தம்பி பத்து ஒளிஒலி வட்டத்தகடு தருகிறேன் நேரம் ஒதுக்கிப் பார். குறைந்தது தொடர்ச்சியாகப் பார்த்தாலே ஐந்து நாட்கள் ஆகும் நீ விடுமுறையில் தானே இருக்கிறாய்ப் பார்த்துவிட்டுச் சொல் உனது உடலுக்கான வைத்தியம் உள்ளே உள்ளதென்றார். என்னடா இது மாயம் மந்திரம் எதாவது இருக்குமா மந்திரித்துச் செய்த ஒளிஒலி வட்டதகடோ என்று கற்பனையெல்லாம் ஒரு பக்கம் சென்றது . ஆனால் அவர் பெரும் நம்பிக்கையோடு என்னோடு தந்தார் இதனை நகல் எடுத்துக்கொண்டு திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற உத்திரவாதத்துடன் நானும் வாங்கிச் சென்றேன் . 

முதல் வேலையாக வீட்டிற்குச் சென்று மடிக் கணினியில் பத்து வட்டத்தகடையும் நகல் எடுக்க ஆரம்பித்தேன். இரவு உணவுக்குப் பின் முதல் தடைக் காண ஆரம்பித்தேன் , முதல் முறையாகத் தான் அவரைக் காண்கிறேன் ஆமாம் திரு. ’ஹீலர் பாசுகர்’ அவர்கள் தான் தொடங்கியதில் இருந்தே பேசிக் கொண்டே தான் இருந்தார் இப்போ முடியுமோ எப்போ முடியும் என்பதையும் பார்க்கப் பார்க்க மணி மூன்றாகி விட்டது. சரி தூங்கலாமென்று தூங்கி விட்டேன் மறு நாள் காலையில் எழுந்துக் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தேன். அம்மா எத்தனை முட்டைப்பா வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் சொல் சாப்பாட்டுக்கு முன்னால் எடுக்க வேண்டிய குளிகைகளை எடுத்துக் கொள் என்றார். 


குளிகைகள் இனி எனக்குத் தேவையில்லை முட்டையும் வேண்டாம் கோழியும் வேண்டாம் ஆவிப் பறக்க இட்லிச் சுட்டுக் கட்டிச் சட்ணியும் சாம்பாரும் செய்துக் கொண்டு வாம்மா நான் சாப்பிடப் போறேன் என்றேன் . அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு வைத்தியம் பார்த்தால் ஒழுங்காகப் பார் அரைகுறையாகப் பார்க்காதே செய்யாதே என்றார்கள் . எனக்கு ஒன்றும் இல்லை எல்லாம் ஓடிப் போச்சும்மா ஓடிப் போயிடும் துரத்திவிடுவேன் நெடுந்தொலைவுக்கு நோய்களை என்றேன் . வாய்க்கு ருசியா இப்போ செய்துத் தரப் போறீங்களா நான் வெளியேக் கிளம்பவா என்றேன் உன்னோடு போட்டிப் போட முடியாது எதாவது செய் என்று இட்லியும் காரச் சட்னியுமாய் வந்தார்கள் . குளிகைகள் இனி எனக்குத் தேவையில்லை முட்டையும் வேண்டாம் கோழியும் வேண்டாம் ஆவிப் பறக்க இட்லிச் சுட்டுக் கட்டிச் சட்ணியும் சாம்பாரும் செய்து கொண்டு வாம்மா நான் சாப்பிடப் போறேன் என்றேன் . அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு வைத்தியம் பார்த்தால் ஒழுங்காகப் பார் அரைகுறையாகப் பார்க்காதே செய்யாதே என்றார்கள் . எனக்கு ஒன்றும் இல்லை எல்லாம் ஓடிப் போச்சும்மா ஓடிப் போயிடும் துரத்திவிடுவேன் நெடுந்தொலைவுக்கு நோய்களை என்றேன் . வாய்க்கு ருசியா இப்போ செய்து தரப் போறீங்களா நான் வெளியே கிளம்பவா என்றேன் உன்னோடு போட்டிப் போட முடியாது எதாவது செய் என்று இட்லியும் காரச் சட்னியுமாய் வந்தார்கள் .

அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தண்ணீர்க் குடித்து விட்டேன் நேரம் துவங்கியதைக் கணக்கில் வைத்துக் கொண்டேன் . அவர் இட்லிக் கொண்டு வர முன்னப் பின்ன அரை மணிக்கு மேல் ஆகியிருந்தது . இட்லியைப் பார்த்ததும் அவ்வளவு ஆவல் காணததைக் கண்டவன் போலக் கண்டேன் இட்லியைச் சட்னித் தொட்டு மெல்ல சுவைக்க ஆரம்பித்தேன் அவசரப் படவில்லை நிதானமாக 

உமிழ்நீர் சுரந்து உணவோடு கலக்க 
உதடுப் பிரிக்காமல் உண்ண ஆரம்பித்தேன்  

நாவிற்குச் சுவையுணர்த்திப் பற்களால் மென்று மென்று 
கூழாக்கிக் கூழாக்கி உணவையனுப்பினேன்  உடலினுள்ளே 

நான்கு இட்லிகள் சாப்பிட அரைமணி நேரம் ஆகியது அந்தக் கடைசி வாய்ச் சாப்பிடும் போதே வயிற்றினுள்ளிருந்து சிறு ஏப்பம் எனக்குத் தேவையான உணவு கிடைத்து விட்டது இனி ஏதும் வேண்டாம் நான் கேட்கும் பொழுது எது கேட்கிறேனோ அதை மட்டும் கொடு என்று வயிறு பேசியதுப் போல் ஓர் உணர்வு என்னை மெல்லத் தீண்டிச் சென்றது . ஏங்க நாலு இட்லியை இன்னுமா சாப்பிடுறீங்க என்று சக்தி கேட்டுக் கொண்டே அகத்தியன் அச்சுதனை தோட்டத்தில் இருந்து உள்ளே அழைத்து வந்தாள். அம்மாவும் இன்னுமாடா சாப்பிடுற அட என்ன நாலு இட்லிதான் சாப்பிட்டிருக்க என்று அவர் முறைக்கு அவரும் பேசிக் கொண்டிருந்தார்.

“ அவர்களுக்கென்னத் தெரியும் நான் அமிர்தம் உண்ண ஆரம்பித்து விட்டேனென்று “ 

முதல் பகுதிக்கு : வாங்கச் சுவைத்து உண்ணலாம் 

கலியுகம் : கல்யாணச் சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் அகா அகா அகா. தொடர்ந்து வாசிங்க உடலைக் காப்பதைப் பற்றிப் பார்க்கலாம் என்னப்பா நீ வைத்தியனா அவருச் சொன்னதைச் சொல்லப் போற அவ்வளவுதானேன்னு நீங்க கேட்பது எனக்கும் கேட்கிறது. என்னதான் அவர் சொன்னது நான் பார்த்த வட்டத்தகடுப் பத்தில் ஒன்று மட்டும் தான் இன்று வரை மீதி ஒன்பது தகடுகளின் நகல் அப்படியே தான் கணினியுள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மனதிற்குச் சரியான தீர்வை முதல் தகட்டின் முதல் காணொளியிலே தந்துவிட்டார் எனக்கு அதனால் மற்றதைப் பார்க்கவில்லை . ஆதித் தமிழனே முதல் வைத்தியன் என்று கூறி விடைபெறுகிறேன் . தொடரும் ...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி