வெள்ளி, 7 நவம்பர், 2014

கணைதனில் உள்ளக்கரு அள்ளும்...!


அர்த்தமாய் உருமாறி உமையாள்தன் இடமேறி
        தக்கநிலை கொடுத்தனவோ சொக்கன் சொக்கியே
சுயமிழந்தான் உற்றதொழில் தனை மறந்தே
        நித்தமெழில் செழித்தெழவே தடை தகர்த்ததரி
பித்தனாகி சித்தனாகி சுத்தமெனும் சுடர்கொணர
        அந்தமாகி அணுபந்த மாகிசந்த மியற்றுமால்
திருவென்ற உருவொன்றாய் அருகிட அருளும்
        அவணியே அவனுரு கொள்வானுள் குடியாம்

சிங்கமொடு காட்டிலே தங்குமறை கூடாய்
        திங்குமரு புல்லினம் தாங்குமருள் மேனியே
நிற்கதுணை வேண்டியே உடுத்தும் உடையாய்
        யாருனை தீண்டுவாரே தூணாகிடும் அரண்
அண்டுவா ரில்லாத தொண்டு தானில்லை
        விண்டதாகம் மொண்டு தானருக தூண்டும்
நிலைகொள்ள நிம்மதி தனைக் கொள்ளும்
        விரதவியா பாரமாய் திரித்தது வெல்லும்

தரித்ததை சொல்லும் தகனமே அல்லல்
        பகலுமே கொள்ளும் பசித்த மயக்கம்
விரித்ததை வெல்ல வினைதான் செல்ல
        கணைதனி லுள்ள கருத்தினை அள்ளும்
கழற்றினி வேடம் களைத்த உருபோதும்
        களம்நிறை கொண்ட கயவனாய் உள்ளில்
கலைச்செல்ல காலம் நடத்தும் விளையாகு
        அரங்கேற்றம் காண விரைவான் அங்கு

அர்த்தநாரி யாமவன் சொல்லும் அர்த்தங்கேள்
        உனையுற்று நோக்கவே எங்கும் காணுவாய்
தினமரிந்த மந்திரம் திரியங்கும் எந்திரம்
        நகலிலா திருநகையு மாயுரு காணுவாய்
பகையிலே திகழுமகம் கொண்டதற மனதே
        கொணர்வாய் பாக்யநாத பக்கம் காணுவாய்
தாங்கிய தேகமினி வேண்டாவிடு வாக்யம் 
        தங்குமேட்டி லேயிரும் திவ்யம் காணுவாய்

6 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

சிறப்பான சொற்களால்
சிரத்தையுடன் தொடுக்கப்பட்ட
சீர்மிகு பாமாலை....

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

KILLERGEE Devakottai சொன்னது…


நால்லதொரு பாமைலையை பூமாலையாக கோர்த்த விதம் அருமை நண்பா,,,
இணைந்திருப்போம் இணையத்தில் ஆகவே இணைத்துக்கொண்டேன் எம்மை.

UmayalGayathri சொன்னது…

அருமையான பாமாலை

'பரிவை' சே.குமார் சொன்னது…

மகேந்த்திரன் அண்ணன் சொன்னது போல் பாமாலையோ... இல்லை கில்லர்ஜி அண்ணன் சொன்னது போல் பூமாலையோ... நமக்கு இன்னும் இருமுறை படிக்கணும் தினேஷ்... ஏன்னா அவுக மாதிரி அம்புட்டுத் தமிழறிவெல்லாம் கிடையாது... உங்க கவிதைகளுக்காகவே தமிழ் டிக்ஷ்னரி வாங்கணும் போல... இல்லயின்ன நம்ம காதலனைத்தான் கூப்பிடனும்...

நல்ல கவிதை... வாழ்த்துக்கள் சகோதரா...

தனிமரம் சொன்னது…

அருமையான கவிதை அர்த்தநாரீஸ்வர் போற்றிப்பாடும் பாடு பொருள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி