ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆட்கொள்ளேன்....!


வலிகள் ஆழமாய் ஊடுருவிச் செல்ல
உணர்வுகள் நங்கூரமிட்டு நரகமெனும்
நகரொன்ரை காண்பிக்கிறது துயரெனும்
துகிலுரிப்பாயோ உள்ளில் ....

கண்டுகொள்ளா கள்ளனின் பார்வையிலே
பாவை மயிலே மெல்லென நடைப்பழகி
சொல்லெனும் சாரம் தாழ்த்தி வில்லினின்
அம்பாகி ஆட்கொள்ளேன் அடியவளே .......

நிறைந்தென்னில் நிலைக்கொண்டாய்
வளைந்தென்னில் மலர்ச்சூடி மனம்கொண்டு
குணம் வென்று அகம் கொன்று - நில்லா
ஓட்டத்தில் தவழும் மனமே ....

தொங்குவார் சடலத்தே மங்குவார் வயதணியோர்
வாரனின் மாயமெனில் தங்குதாம் இலைதனில்
மறுவுரும் சாடையாய் மனமதில் சோலையாய்
கருவுறும் காண விழைவு

5 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

//"ஆட்கொள்ளேன்....!"//
என்னது ஆளை கொல்ல போறீங்களா....


அவனா நீ....

Madhavan Srinivasagopalan சொன்னது…

புள்ள என்னோன்னவோ.. சொல்லுது..
எனக்குத்தான் புரிய மாட்டேங்குது..

மாலதி சொன்னது…

நிறைந்தென்னில் நிலைக்கொண்டாய்
வளைந்தென்னில் மலர்ச்சூடி மனம்கொண்டு
குணம் வென்று அகம் கொன்று - நில்லா
ஓட்டத்தில் தவழும் மனமே ....nice

'பரிவை' சே.குமார் சொன்னது…

Nalla kavithai...

உணவு உலகம் சொன்னது…

//பாவை மயிலே மெல்லென நடைப்பழகி
சொல்லெனும் சாரம் தாழ்த்தி வில்லினின்
அம்பாகி ஆட்கொள்ளேன் அடியவளே//
ஆட்கொள்ளட்டும்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி